சபைகளுக்கு ஆலோசனை

143/326

கிறிஸ்தவர் அவிசுவாசிக்கு அளிக்கும் விடை

சமயக் கோட்பாடுகளின் உறுதியை சோதிப்பதற்குரிய நெருக்கமுள்ள நிலைமை வருகின்ற பொழுது, கிறிஸ்தவர் ஒவ்வொருவரும் செய்ய வேண்டுவதென்ன? அவர் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாய்ச் சொல்ல வேண்டுவது:--- நான் நேர்மையுள்ள கிறிஸ்தவன், வேதாகமத்தின்படி ஓய்வு நாள் வாரத்தின் ஏழாம் நாள் என்று நம்புகிறேன், எம் விசுவாசமும் கோட்பாடுகளும் எதிர் திசைக்கு வழி நடத்தும் இயல்புடையன. நான் தெய்வ சித்தத்தை இன்னும் பரி பூரணமாய் அறிந்து பின்பற்றி நடப்பேனாயின், நாம் இன்பமாய்க் கூடி வாழ இயலாது. நான் மென்மேலும் உலகத்தின் சாயலை விட்டு நீங்கிக் கிறிஸ்துவின் சாயலை அடைய வேண்டும். நீர் இன்னும் தொடர்ச்சியாய்க் கிறிஸ்துவின் அன்பும் சத்தியத்தில் வசீகரமும் காணாவிடின், நாம் நேசியாத உலகத்தை நீர் நேசிப்பீர். நீர் நேசியாத தெய்வ காரியங்களை நான் நேசிப்பேன். ஆவிக்குரிய காரியங்களை ஆவிக்குரிய முறையாய் வகையறுக்கின்றார்கள். ஆவிக்குரிய முறையாய் வகையறுக்கா விடின் என்னைக்கட்டுப்படுத்துகின்ற தெய்வக் கட்டளைகளை நீர் காணவும், நான் சேவிக்கின்ற தலைவருக்குரிய என் கடமைகளை நீர் உள்ளவாறு உணர்ந்து கொள்ளவும் உம்மால் இயலாது. ஆனால், சத்திய மார்க்கக் கடமைகளுக்காக நான் உம்மை அலட்சியம் பண்ணுகின்றேன் என்று நினைத்து நீர் வருந்துவீர்; உமக்குச் சந்தோஷம் இராது, நான் கடவுளிடம் வைத்திருக்கின்ர பற்றுறுதி கண்டு உமக்குப் பொறாமை உண்டாகும். என் சமய நம்பிக்கையில் நான் தன்னந்தனிமையாய் இருப்பேன். உம் கருத்துக்கள் மாறுதல் அடைந்து, உன் உள்ளம் கடவுள் கட்டளைகளுக்கு இணங்கி, நீர் என் இரட்சகரிடத்தில் அன்புகூரக் கற்றிக்கொள்ளும் பொழுது, நம் உறவுமுறை புதிதாக விடும். CCh 368.2

விசுவாசி இவ்வண்ணம் கிறிஸ்துவுக்காகத் தன் மனச்சாட்சி ஒப்புக்கொள்ளுகின்ற தியாகத்தைச் செய்கின்றார். அதுவே நித்திய ஜீவன் தாம் இழந்து போகக்கூடாத அவ்வளவு பெருமதிப்பு உடையது என்பதைக் காண்பிக்கும். அதனால் அவர் தம் வாழ்க்கை நலத்தை இயேசுவை விட்டு விலகியவரும் உலகத்தைத் தெரிந்துகொண்டவரும், கிறிஸ்துவின் சிலுவையை விட்டு விலகி நடக்கும் இயல்புள்ளவருமான ஒருவருடன் பிணைத்துக்கொள்வதைப் பார்க்கிலும் தாம் மணஞ் செய்யாமல் இருந்து விடுதலே மேலான செயல் என்று உணர்ந்து கொள்வார். CCh 369.1