சபைகளுக்கு ஆலோசனை

126/326

சபைகளுக்கு ஆலோசனை

இரண்டாம் பகுதி

அத்தியாயம்-25

ஞானஸ்நானம்

ஞானஸ்நானம், கர்த்தருடைய இராப்போசனம் ஆகிய இரு நியமங்களும், ஒன்று வெளியிலிருந்து சபைக்குள் வருவதற்கும், மற்றது சபையிலிருந்து கொண்டு அனுசரிக்கப்பட வேண்டியதுமான ஞாபக ஸ்தம்பங்கள், இந்நியமங்களின் மேல் கிறிஸ்து மெய்க் கடவுளின் திருப் பெயரைப் பொறித்திருக்கின்றார். CCh 323.1

கிறிஸ்து ஞானஸ்நானத்தைத் தம் ஆவிக்குரிய இராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு அடையாளம் ஆக்கி யிருக்கின்றார். பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் அதிகாரத்தின் கீழ் அங்கீகாரம் பெற விரும்புகிறவர்கள் அனைவரும் அதற்கு இணங்கி நடக்க வேண்டிய உறுதியான நிபந்தனையாக, அவர் இதை உண்டாக்கி யிருக்கின்றார். மனிதர் கடவுளது ஆவிக்குரிய இராஜ்யமாகிய மாளிகைக்குக் கடந்து போகு முன்னே, சபையில் ஓர் உறைவிடம் கண்டு பிடிக்க முன், நமது நீதியாயிருக்கிறா கர்த்தர் (எரே 23:6) என்னும் தெய்வத் திருப்பெயர் முத்திரையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். CCh 323.2

ஞானஸ்நானம் மகா பய பக்தியுள்ள உலகத்துறவு. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் மும்மைத் திருப் பெயரால் ஞானஸ்நானம் பெறுகின்றவர்கள், முதன் முதல் தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் பிரவேசிக்கின்ற தருணத்தில், தாங்கள் சாத்தானுக்குத் தொண்டு செய்வதை விட்டு நீங்கி, பரம அரசர் புதல்வர்களாய், அவரது அரச குடும்ப அங்கத்தினர் ஆகி விட்டதாக வெளிப்படையாய் அறிக்கை யிடுகின்றார்கள். நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்து போய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்னும் கட்டளை அவர்கள் கீழ்ப்படிந்துள்ளார்கள். நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருக்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாய் இருப்பீர்கள் என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார் என்னும் வாக்குத்தத்தம் அவர்களிடம் நிறைவேறுகின்றது. (II கொரி 6:17,18). CCh 323.3

ஞானஸ்நானத்தில் நாம் செய்கின்ற பிரதிக்கினைகள் பல காரியங்களைத் தழுவியுள்ளன. நாம் கிறிஸ்துவின் மரணத்தின் சாயலில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் திருப்பெயரால் அடக்கம் பண்ணப்பட்டு, அவரது உயிர்த்தெழுதலின் சாயலின் எழுப்பப்பட்டு, புது வாழ்க்கை நடத்த வேண்டும். நம் வாழிக்கை கிறிஸ்துவின் வாழ்க்கையுடன் பிணைக்கப்பட வேண்டும். அது முதல் விசுவாசி தான் கடவுளுக்கும், கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவிக்கும் பிரதிஷ்டை செய்யப் பெற்றிருப்பதைத் தன் மனதில் பதித்துக்கொள்ள வேண்டும். அவன் தன் உலக சிலாக்கியங்கள் அனைத்தையும் இப் புதிய தொடர்பிற்கு இரண்டாவதாக வைத்துக்கொள்ள வேண்டும். அவன் அப்பால் மேட்டிமையாகவும் சுகபோகமாகவும் வாழ்க்கை நடத்த மாட்டேன் என்று வெளிப்படையாக அறிக்கையிட்டிருக்கிறான். அவன் அப்புறம் கவலையின்றியும் கருத்தின்றியும் வாழ்க்கை நடத்துதல் கூடாது. அவன் கடவுளுடனே உடன்படிக்கை செய்திருக்கிறான். அவன் உலகத்திற்கு மரித்துப் போனான். அவன் கிறிஸ்து இராஜ்யத்தின் குடியும், தெய்வ சுபாவத்தின் பங்காளியுமாய் இருத்தலால், ஆண்டவருக்கென்றே வாழ்ந்திருக்க வேண்டும். தன்னிடம் ஒப்புவிக்கப் பெற்ற திறமைகளை அவருக்காகவே கையாள வேண்டும். தான் கடவுள் கையொப்பம் இடப் பெற்றவன் என்ற உணர்ச்சியை இழந்துவிடலாகாது. அவன் தன் வரங்கள் எல்லாவற்றையும் அவரது திருப்பெயர் மகிமைக்காகவே பயன்படுத்தி, தெய்வீக சுபாவத்தைப் பெறும்படி தன்னையும், தனக்குள்ள எல்லாவற்றையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். CCh 324.1