சபைகளுக்கு ஆலோசனை

123/326

பகிரங்கமான ஜெபங்கள் நீண்டிருத்தல் ஆகாது

கிறிஸ்துவானவர் தமது சீஷர்களின் பிரார்த்தனை சுருக்கமாக, அதிகப்படியான வார்த்தைகளில்லாமல் அவர்கள் தேவையை மட்டும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டுமென்று போதித்தார். அவர்கள் தங்கள் சரீராத்தும தேவைகளுக்கான ஆசீர்வாதங்களைக் கேட்பதிலும், அவைகளைப்பற்றிய தங்களுடைய நன்றியறிதலைத் தெரிவிப்பதிலும் அவர்களுடைய ஜெபத்தின் அளவும் பொருளும் எத்தன்மையாயிருக்கவேண்டும் என்பதை அவர் நிர்மாணித்துத் தந்திருக்கிறார். இந்த மாதிரி ஜெபம் எத்தனை விரிவானது! உள்ளப்பையான எல்லாருடைய தேவையையும் அது தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கிறது. சாதாரண ஜெபத்திற்கு ஒன்றிரண்டு நிமிடங்களே போதுமானவை. விசேஷித்த சில தருணங்களில் தேவ ஆவியானவர் ஜெபிக்க வேண்டிய வார்த்தைகளை நமக்கருளுவதால் ஆவியோடு நாம் ஜெபிக்க அவசியமாகலாம். ஏக்கமடைந்த ஆத்துமா வேதனையுடனே கடவுளை வாஞ்சித்துப் புலம்புகின்றது. யாக்கோபு தேவனோடே போராடியது போலவே ஆவியும் போராடி, கடவுளுடைய வல்லமையின் விசேஷித்த வெளிப்படுத்தல்களைப் பெறாத வரையில் அவர்ந்திருக்கமாட்டாது. அத்தகைய ஜெபங்களை தேவன் அங்கீகரிப்பார். CCh 315.1

ஆயினும் அனேகர் வறண்டதும், பிரசங்க தோரணையுமான ஜெபங்களை செய்கின்றனர். இவர்களுடைய பிரார்த்தனை மனிதருக்கேயன்றி கடவுளுக்கல்ல. அவர்கள் கடவுளிடம் ஜெபித்துக்கொண்டிருக்கையில் தாங்கள் என்ன செய்தார்கள் என்றுணர்ந்தால், தங்கள் துணிவான செயலைக் குறித்து திகிலடைவார்கள். ஏனெனில் ஜெபிகிறப் பாவனையில் அவர்கள், பிரபஞ்சமனைத்தையும் படைத்தக் கடவுள் உலகில் நடைபெறுகின்ற பொதுக் காரியங்களைக் குறித்து விசேஷித்த தகவல்கள் பெற விரும்புகிறார் என்பதுபொல் அவருக்குப் பிரசனிக்கின்றனர். அத்தகைய பிரார்த்தனைகள்யாவும் சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஒசையிடுகிறகைத்தாளம் போலவுமாகும். பரலோகத்தில் அவை பொருட்ப்படுத்தவில்லை. கடவுளுடைய தூதர்களும், அவற்றைக் கேட்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிற மானிடரும் அலுப்படைகின்றனர். CCh 315.2

இயேசு அடிக்கடி ஜெபித்தார். ஏகாந்தமான சோலைகளுக்கும், மலைகளுக்கும் சென்று தமது வேண்டுதல்களைப் பிதாவுக்குத் தெரியப்படுத்தினார். மக்கள் தங்கள் அன்றாட அலுவல்களையும் தொழில்களையும் முடித்து, களைத்து, இளைப்பாறிக்கொண்டிருந்தபோது கிறிஸ்து தமது நேரத்தை ஜெபத்தில் செலவிட்டார். பிரார்த்தனைச் செய்வதை நாம் தடை செய்ய மாட்டோம். ஏனெனில் விழிப்புடனே ஜெபம் செய்வது மிகவும் குறைவு. ஆவியோடும், கருத்தோடும் பிரார்த்திப்பது அதிலும் குறைவு. ஆனாலும் ஊக்கமுமுள்ள பிரார்த்தனைச் செய்வது எப்போதும் தகுதியானது. அவ்வாறு பிரார்த்திபது சோர்புண்டாக்காது. அத்தகைய பிரார்த்தனை எழுப்புதலை உண்டுபண்ணி, பக்தி செய்தலை விரும்பும் அனைவரும் முசிப்பாறுதல் அடையச் செய்கின்றது. CCh 316.1

அனேகர் அந்தரங்க பிரார்த்தனைச் செய்யாதிருக்கிற காரணத்தால் அவர்கள் தேவாராதனைக்காகக் கூடுகின்ற பொழுது, பின் வாங்கிய தங்கள் நிலையைக் குறித்து நீண்டதும் அலுப்புண்டாக்குகிறதுமான ஜெபங்களைச் செய்கின்றனர். ஒரு வாரம் முழுவதும் செய்யாமல் விட்டிருந்த கடமைகளைக் குறித்து திரும்பத் திரும்ப ஜெபத்தில் கூறி, தாங்கள் அசட்டையாயிருந்ததினிமித்தம் தங்களை வாதனைக்குட்படுத்துகின்ற குற்றவுணர்ச்சியுடைய மனச்சாட்சியைச் சாந்தி செய் கின்றனர். தங்கள் ஜெபங்களின் முலம் தங்களைத் தேவ தயவுக்குப் பாத்திரர் ஆக்கிக்கொள்ளலாமென நம்புகிறார்கள். ஆனால் அனேகமாய் இப்படிப்பட்ட ஜெபங்கள் தங்களோடு சேர்ந்தவர்களுடைய மனதை இருள் மலிந்த தங்கள் தாழ்ந்த நிலைக்கே இழுத்து விடுகின்றன. விழித்திருந்து ஜெபிப்பது பற்றி கிறிஸ்துவின் உபதேசத்தைக் கிறிஸ்தவர்கள் கவனித்து நடப்பார்களாகில், தேவனைத் தொழுதுகொள்வதில் அதிக விவேகமாயிருப்பார்கள். CCh 316.2