சபைகளுக்கு ஆலோசனை
பரிசுத்த ஆவி ஊற்றப்படுமுன் ஐக்கியம் காணப்பட வேண்டும்
சீஷர்கள் உயர்ந்த இட்த்திற்காக வாக்குவாதம் செய்வதை விட்டு ஓய்ந்து ஐக்கியப் பட்டபோது அவர்கள் பேரில் ஆவி ஊற்றப்பட்டது என்பதை கவனியுங்கள். அவர்கள் ஒருமனப்பட்டிருந்தார்கள். எல்லா வித்தியாசங்களும் அகற்றப்பட்டன. ஆவியானவர் அருளப்பட்ட பின்பு அவர்கள் கொடுத்த சாட்சியும் அதுவே, “விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாயிருந்தார்கள்” என்ற வார்த்தையைக் கவனியுங்கள். (அப்.4:32) பாவிகள் பிழைக்கும்படி அவர்களுக்காக மரித்தவரின் ஆவி விசுவாசிகளின் கூட்டமனைத்தையும் ஊக்கப்படுத்தினது. CCh 308.2
சீஷர்கள் தங்களுக்கென ஒரு ஆசீர்வாத்த்தையும் கேட்கவில்லை. அவர்கள் ஆத்துமாக்களின் பாரத்தை சுமந்து நின்றனர். சுவிசேஷம் பூமியின் கடையாந்தரமட்டும் கொண்டு போகப்பட வேண்டியதாயிருந்த்து. கிறிஸ்து வாக்களித்த ஆவியின் வல்லமை தங்கள் பேறு என்று அவர்கள் உரிமை பாராட்டினர். பரிசுத்த ஆவி ஊற்றப்பட்ட பின்பு ஆயிரக்கணக்கானோர் ஒரு நாளில் மனந்திரும்பினர். CCh 308.3
அவ்விதமாகவே இன்றும் நடக்கக்கூடும், கிறிஸ்தவர்கள் எல்லாப் பிரிவினையையும் அப்புறப்படுத்திவிட்டு இழந்து போன ஆத்துமாக்களின் மீட்புக்காக தங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதத்தை அவர்கள் விசுவாசத்துடன் கேட்க்க் கடவார்கள். அது அருளப்படும். அப்போஸ்தலர்களின் நாட்களில் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டதே “முன்மாரி” யாகும், அதன் விளைவு மகிமையாயிருந்த்து. ஆனால் பின்மாரி அதைவிட அதிகமாக இருக்கும். இக்கடைசி நாட்களில் ஜீவிக்கிறவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குத்தத்தம் யாது? “நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.” “பின்மாரி காலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக் கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்.” சகாரியா 9:12; 10:1. 8T. 20, 21. CCh 309.1