சபைகளுக்கு ஆலோசனை

116/326

விசுவாசி தொழில்துறையில் சிறந்தவன்

கிறிஸ்துவின் அளவுப்படி உண்மையுள்ளவன, குன்றா ஒழுக்கமுடையவன். போலி எடைகற்கள், கள்ளத்தராசுகள் மூலம் பலர் தங்கள் தொழிலை விருத்தி பண்ண முயலுகிறார்கள். ஆனால், அவை கர்த்தருடைய பார்வையில் அருவருபானவை என்றாலும், தேவனுடைய கற்பனைகளைக்கைக்கொள்ளுகிறோம் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்களில் பலர். போலி எடைக்கற்களையும், கள்ளத்தராசுகளையும் உபயோகிக்கிறார்கள். ஒருவன் தேவனோடு உண்மையாய் ஐக்கியப்பட்டு அவர் கற்பனையை உண்மையாய்க் கைக்கொண்டால், அவன் ஜுவியம் உண்மையை விளங்கச் செய்யும்; அவன் கிரியைகள் முற்றிலும் கிறிஸ்துவின் போதனைக்கு ஏற்றதாயிருக்கும். தன்னுடைய கண்ணியத்தை லாபத்திற்காக விற்கமாட்டான். ஏனென்றால் அவனுடைய இலட்சியங்கள் எல்லாம் ஸ்திரமான அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டுள்ளன. உலகக் காரியங்களில் அவனுடைய நடக்கை அவனுடைய இலட்சியங்களை பிரதிபிம்பிக்கிறதாயிருக்கிறது. திடமான உண்மைநிலை, உலகக் குப்பைக் கூளங்கள் மத்தியில் பிரகாசிக்கும் பொன் போல் விளங்கும். CCh 302.3

ஏமாற்றம், அசத்தியம், உண்மையின்மை, இவற்றை மனிதன் கண்களுக்கு மறைந்து வைக்கலாம்; ஆனால் தேவனுடைய கண்களுக்கு மறைக்க முடியாது. குணத்தை வெளிப்படுத்தும் சொற்ப காரியங்களை தேவதூதர்கள் பரலோக புஸ்தகங்களில் பதிவு செய்கிறார்கள். ஒரு வேலையாள் தன் அன்றாட ஊழியத்தில் உண்மையற்று, வேலையில் ஏனோதானோவென்றிருந்தால், உலகம் தொழிலில் காணப்படும் அவனுடைய உண்மை நிலைக்குத்தக்கதாக அவனுடைய ஆவிக்குரிய ஜீவியத்தைக் கணிப்பது பொய்யாகாது. CCh 303.1

மேகங்களில் கிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார் என்று விசுவாசிக்கிறவர்கள் தங்களுடைய அன்றாட அலுவல்களில் கவலைத்தாழ்ச்சியாயிருக்க மாட்டார்கள். அதிசீக்கிரம் வரப்போகும் கிறிஸ்துவுக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்கள், அலுவல்களில் சோம்பலாய் இராமல் ஜாக்கிரதையுள்ளவர்களாயிருப்பார்கள். அவர்களுடைய வேலை, கவலைத் தாழ்ச்சியாயும், உண்மைக் குறைவாயும் செய்யப்படாமல், உண்மையோடு குறித்த சமயத்தில் தீர்க்கமாய்ச் செய்யப் படும். இவ்வாழ்க்கைக்குரிய காரியத்தில் கவலைத் தாழ்ச்சியாயிருப்பது, தங்கள் ஆவிக்குரிய தன்மையைக் குறித்தும், தாங்கள் உலகத்தை விட்டுப் பிரிந்திருக்கிறதைக் குறித்தும் கொடுக்கும் சாட்சி என்று அவர்கள் தங்களையே புகழ்ந்து, மாபெரும் வஞ்சகத்திற்கு உள்ளாயிருக்கிறார்கள். அவர்களுடைய யோக்கியம், உண்மை, நேர்மை என்பவைகள் உலகக் காரியங்களில் சோதிக்கப்பட்டு ரூபகாரப் படுத்தப்படுகின்றன. கொஞ்சத்தில் உண்மையாயிருப்பவர்கள் அனேகத்திலும் உண்மையாயிருப்பார்கள். CCh 303.2

அனேகர் இவ்விஷயத்தில் பரீட்சிக்கப்படுகையில் தவறி விடுவார்களென எனக்குக் காட்டப்பட்டது. உலகக் காரியங்களை நிர்வகிப்பதில் அவர்கள் தங்கள் சுபாவகுணத்தை விருத்தி செய்கின்றனர். தங்கள் உடன் மனிதரோடு நடந்து கொள்ளும் விஷயத்தில், நாணயக் கேட்டையும், தந்திரத்தையும், உண்மையின்மையையும் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். மறுமைக்குரிய நித்திய ஜுவனைக்குறித்தத் தங்கள் நிச்சயம், இவ்வாழ்க்கைக் குரியவைகளில் தாங்கள் எப்படி நடந்து கொள்ளுகிறர்களென்பதைச் சார்ந்திருகிறதென்றும், நீதியுள்ள குணங்கட்டுவதில் அதிநேர்மை இன்றியமையாததென்றும் அவர்கள் சிந்தியாமற் போகிறார்கள். CCh 304.1

சத்தியத்தை விசுவாசிக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களிடத்தில் காணப்படும் வெது வெதுப்பான தன்மைக்கு உண்மைக்கேடே காரணம். அவர்கள் கிறிஸ்துவோடு இணைக்கப்படாமல் தங்கள் ஆத்துமாவை வஞ்சிக்கின்றனர். ஓய்வுநாளை ஆசரிக்கிறவர்களிடையேயும் திடுக்கிடச்செய்யும் உண்மைத் தாழ்ச்சியுண்டென்று நான் மிகவும் மனவேதனையுடன் சொல்லுகிறேன். 4T. 309-311. CCh 304.2