சபைகளுக்கு ஆலோசனை

111/326

வேதம் படிப்பதற்கான ஆசை இயற்கையானதல்ல

வயோதிபரும், வாலிபரும் வேதத்தை அலட்சியம் செய்கின்றனர். அதை அவர்கள் படிக்கும் பாடமாகவும், அவர்கள் ஜீவியத்தின் சட்டமாகவும் ஆக்குவதில்லை. இவ்வித அலட்சியம் செய்வதில் வாலிபர் விசேஷமாக குற்றவாளிகள். அவர்களில் அனேகர் வேறு புத்தகங்களைப் படிக்க நேரம் கண்டு பிடித்துக்கொள்கின்றன்ர். ஆனால் நித்திய ஜூவனுக்கான வழியைக் காட்டும் புத்தகம் தினம் வாசிக்கப்படுவதில்லை. வேதத்தை அலட்சியம் செய்து, வீண் கதைகளைக் கவனத்துடன் படிக்கின்றனர். வேத புத்தகம் நம்மை மேலான பரிசுத்த ஜீவியத்திற்கு வழி நடத்துவதாக இருக்கிறது. இளைஞர்கள் பொய்யான கதைகளை வாசித்து அவர்களின் சிந்தனை மாறுபட்டிராவிட்டால், தாங்கள் வாசித்தவைகளில் மிகவும் உற்சாகமான புத்தகம் வேதம் என்று கூறுவார்கள். C.T. 138,139. CCh 295.1

பெரிய வெளிச்சத்தையுடைய ஜனமாக நாம் நமது பழக்கவழக்கங்கள், வார்த்தைகள், குடும்ப ஜீவியம், கூட்டுத் தோழமையாவிலும் உயர்ந்து காணப்பட வேண்டும். திரு வசனத்தைக் குடும்பத்தின் வழி காட்டியாக மதித்து, அதற்குரிய கவனத்தைக் கொடுங்கள். பிரதியொரு பழக்கத்திற்கு அளவு கோலாகவும், ஒவ்வொரு கஷ்டத்திலும் ஆலோசனைத் துணையாகவும் அதை மதிக்க வேண்டும். நமது குடும்ப வட்டகையில் தேவ சத்தியம், நீதியின் ஞானம் தலைமை வகித்திராவிட்டால் ஆத்துமாவுக்கான மெய்யான ஆசீர்வாதம் இருக்க முடியாது என்பதைக் குறித்து நம் சகோதர சகோதரிகள் உணருவார்களா? தெய்வ சேவையை ஒரு பாரமாக எண்ணும் சோம்பல் பழக்கம் தங்கள் மனதிற்குள் வராதபடி தடுக்க தாய் தகப்பன்மார் முயல வேண்டும். சத்தியத்தின் வல்லமை வீட்டில் ஒரு பரிசுத்தமாக்கும் ஏதுவாக இருக்க வேண்டும். C.G.508, 609. CCh 295.2

தேவனுடைய பிரமாணத்தின் உரிமைகளையும், பாவக்கறைகளிலிருந்து சுத்தரிக்கும் நமது மீட்பர் இயேசுவின் பேரில் விசுவாசம் வைப்பதையும் பற்றி பிள்ளைகள் தங்கள் இளமைப் பருவத்திலேயே போதிக்கப்பட வேண்டும். இவ் விசுவாசம் தினமும் கட்டளையினாலும், மாதிரியினாலும் போதிக்கப்பட வேண்டும். S.T.329. CCh 296.1