சபைகளுக்கு ஆலோசனை

102/326

சாட்சியாகமங்களை அவற்றின் கனிகளால் நிதானித்தறியுங்கள்

சாட்சியாகமங்களை அவற்றின் கனிகளால் நிதானித்தறியுங்கள். அவற்றின் போதகம் எத்தன்மையான ஆவியையுடையது? அவற்றால் உண்டாகும் பயன்யாது? இவற்றை நிதானித்தறிய விரும்புகிறவர்கள் இந்த தரிசனங்களினால் ஏற்பட்டப் பலனை அறிந்துகொள்ள வேண்டும். சாத்தானின் வல்லமைகளின் எதிர்ப்பு மற்றும் அவனுக்குத் துணையாக நின்ற மானிடரின் செல்வாக்கு இவைகளினின்று அவர்களைத் தப்புவிக்கவும், பலமருளவும் தேவன் சித்த்ங்கொண்டிருக்கிறார். CCh 277.2

ஒன்று இவற்றின் மூலமாகக் கடவுள் தமது சபைக்கு போதனையளித்து, அவர்களுடைய தவறுதல்களைக் கடிந்து கொண்டு, அவர்கள் விசுவாசம் பலமடையச் செய்கின்றார். அல்லது அவ்வாறு செய்யாதிருக்கின்றார். டூந்த வேலை கடவுளுடையதாக இருக்க வேண்டும். அல்லது அவருடையதல்லாததாக இருக்க வேண்டும். சாத்தானுடனே பங்காளியாக அவர் எதிலும் ஈடுபடுகிறதில்லை. நான் செய்து வருகிற ஊழியமும் கடவுளுடைய முத்திரை பெற்றதாகவோ அன்றி சத்துருவின் முத்திரை பதிந்ததாகவோ விளங்கவேண்டும். இக்காரியத்தில் அறைகுறையான யோசனை எதற்கும் இடமில்லை. சாட்சியாகமங்கள் தேவஆவியால் அல்லது பிசாசின் ஆவியால் உண்டானவை. CCh 277.3

தீர்க்கதரிசன ஆவியின் மூலமாகத் தம்மைக் கடவு வெளிப்படுத்திய போது, கடந்த காலமும், நிகழ்காலமும், வருங்காலமும் எனக்கு முன்பாக கடந்து சென்றன. நான் ஒருபோதும் கண்டிராத முகங்களை தரிசனங்களில் கண்டேன். வருடங்கள் பல சென்ற பிறகு, அவர்களைக் கண்டவுடனே அறிந்து கொண்டேன். அத்தரிசனங்களில் என்னுடைய மனதில் தெளிவாகப் பதிக்கப் பெற்ற பொருட்களைப் பற்றி எழுதுமாறு தூக்கத்திலிருந்து எழுப்பப் பட்டேன். நடுநிசியில் இவ்வாறு கடிதங்களை எழுதி நெடுந் தூரத்திலுள்ளவர்களுக்கு அனுப்பிவைத்து போது, நெருக்கடியான நேரத்தில் அக்கடிதங்கள் போய்ச் சேரவும் தேவ ஊழியத்திற்கு வரவிருந்த பெருநாசங்கள் தவிர்க்கப்பட்டன. அனேக வருடங்களாக இந்த வேலையையே செய்து வந்திருக்கின்றேன். குற்றங்களைக் கண்டித்துணர்த்துமாறு நான் எண்ணாதிருக்கும் போதே ஒரு வல்லமை என்னை நெருங்கி ஏவிற்று. இத்தகைய ஊழியம் தேவனாலுண்டானதா? அல்லது சாத்தானாலுண்டானதா? 5T.671. CCh 278.1