சபைகளுக்கு ஆலோசனை
சுயநலமற்ற ஜீவியத்தால் தேவனைக் காண்பி
சுயநலமே பேரளவுக்கு பேணிப்புரியும் பாவமாக இருக்கிறது. அது தேவனை விட்டு நம்மைப் பிரித்து, ஆவிக்குரிய சீர்கேடுகளைப் பரவச் செய்யும் ஒட்டுவாரொட்டி போன்றது. தன்னை வெறுக்காமல் தேவனண்டை திரும்பி வருவதற்கு வேறு வழி கிடையாது. நாம் சுயமாக ஒன்றும் செய்ய முடியாதவர்கள். தேவ பலத்தால் தான் நாம் தீய சுயநலத்தைக் களைந்து, பிறருக்கு நன்மை செய்பவர்களாக ஜீவிக்க முடியும். நமக்குள்ளவைகளை பயனுள்ள உபயோகத்திற்கு படைக்கிறோம் என்றும், சுயநலமற்ற ஜீவியம் செய்கிறோம் என்றும் காண்பிப்பதற்கு நாம் கிறிஸ்தவர்கள் இல்லாத நாடுகளுக்குப் போக வேண்டிய அவசியமில்லை. இவைகளை நாம் நமது குடும்பத்திலும், சபையிலும், அயலகத்தாரிடத்தும், நாம் தொழில் செய்கிறவர்களிடத்தும் செய்ய காட்ட வேண்டும். அன்றாட வாழ்க்கையில் சுயம் வெறுக்கப்பட்டு கட்டுப்ப்டுத்தப்பட வேண்டும். பவுலார். அனுதினமும் சாகிறேன் என்று சொல்லக்கூடியவராயிருந்தார். ஜீவியத்தில் நாம் தினசரி செய்யும் சிறு காரியங்களில் தன்னலம் சாவதே, நம்மை வெற்றிசிறக்கிறவர்களாகச் செய்யும். பிறருக்கு நன்மை செய்யும் வாஞ்சையில் தன்னலம் மறக்கப்பட வேண்டும். அனேகரிடம் பிறருக்கான அன்பு அதிகம் குறைவு படுகிறது. தங்கள் கடமைகளை உண்மையாய்ச் செய்வதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சுய இன்பங்களை தேடித்திரிகின்றனர். CCh 269.1
பரலோகத்தில் ஒருவராவது தங்களைப் பற்றி நினைப்பதில்லை. தங்களுக்குப் பிரியமானவைகளைத் தேடுவதும் இல்லை; ஆனால் சுத்தமான், மெய்யான அன்புடன் தங்களைச் சூழ இருப்பவர்களின் சந்தோஷத்திற்கானவைகளையே தேடுவார்கள். புதுப்பிக்கப்படும் புதிய பூமியில் நாம் பரலோக சமுதாயத்தின் இன்பங்களை அடைய விரும்பினால், இங்கே நாம் பரலோக இலட்சியங்களால் ஆளப்பட வேண்டும். 2T. 132,133. CCh 269.2
தவறாத நிச்சயமான முன் மாதிரி நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கையில், நாம் தவறக்கூடிய மனிதரை மாதிரியாகக் கொண்டு நமக்குள்ளே நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறவர்களாக இருக்கின்றோம் என எனக்குக் காட்டப்பட்டது. நாம் சத்தியத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு நமது ஜீவியம் இருந்த நிலையைக் கொண்டும், உலகத்தைக் கொண்டும், மனிதரின் அபிப்பிராயங்களைக் கொண்டும் நாம் நம்மை அளக்கக் கூடாது. ஆனால் உலகில் நமது தற்போதய அந்தஸ்தும், விசுவாசமும் நாம் கிறிஸ்துவைப் பின்பற்றினதிலிருந்து அது தொடர்ந்து மேம்பட்டதாகவும், பரலோகம் நோக்கினதுமாக இருந்திருதால் அது எப்படி இருந்திருக்கும் என்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாம் சரியானபடி ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய விதம் இக்தொன்றே தான். மற்றெந்த விதமும் சுய ஏமாற்றம் உடையதாகவே இருக்கும். தேவனுடைய ஜனத்தின் குணமும், ஆவிக்குரிய நிலையும், அவர்கள் பெற்றிருக்கும் ஆசீர்வாதங்கள், சிலாக்கியங்கள், கொடுக்கப்பட்டிருக்கும் வெளிச்சம் இவைகளுக்குத் தக்கபடி யிராவிட்டால், அவர்கள் தராசில் நிறுக்கப்பட்டு தூதர்களின் அறிக்கையில் குறைவுள்ளவர்கள் என குறிக்கப்படுவார்கள். 1T. 406. CCh 270.1