சபைகளுக்கு ஆலோசனை
தமது பிள்ளைகள் ஒவ்வொருவர் மேலும் கடவுளின் தனிப்பட்ட சிரத்தை
வேத வாக்கியங்கள் தேவனுக்கு கிறிஸ்துவுக்குமுரிய உறவைச் சுட்டிக்காட்டி, அவ்விருவரின் ஆள் தத்துவத்தையும், தனிக் குணங்களையும் விளக்குகின்றன. CCh 261.3
கிறிஸ்துவின் பிதா தெய்வம்; கிறிஸ்து தேவ குமாரன்; கிறிஸ்து ஒரு உன்னதமான பதவியை வகித்திருக்கின்றார். அவர் பிதாவுடன் சம அந்தஸ்து பெற்றவர். தெய்வ ஆலோசனைகள் யாவும் குமாரனுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. CCh 262.1
யோவான் பதினேழாம் அதிகாரத்தில் கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்காக ஏறெடுத்த பிரார்த்தனையில் இந்த ஐக்கியம் விளக்கப்பட்டிருக்கிறது. நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுகிறேன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேணிக்கொள்ளுகிறேன். நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன் யோவா. 17:20-23. CCh 262.2
அதிசய வார்த்தைகள்! கிறிஸ்துவுக்கும் அவருடைய சீஷர்களூக்குமிடையே நிலைத்திருக்கும் ஐக்கியமானது இரு பக்கத்திலும் ஒருவரின் தனி ஆள் தத்துவத்தை அழிவடையச் செய்வதில்லை. சிந்தையிலும், சுபாவத்திலும், நோக்கத்திலும் அவர்கள் ஒன்றுபட்டிருப்பினும், அவரவரின் தனியாள் தத்துவம் வெவ்வேறானது. தேவனும் கிறிஸ்துவும் இவ்வாறே சிந்தையிலும், சுபாவத்திலும், நோக்கத்திலும் ஒன்றாயிருக்கிறார்கள். CCh 262.3
வான மண்டலங்களையும் பூமியையும் ஆட்சி செய்கின்ற நமது தேவன் நமக்கு எது தேவையாயிருக்கிறதென்று அறிந் துள்ளார். நமது பாதையில் சிறிது தூரம் மட்டுமே நமக்குத் தெளிவாகப் புலப்படும். சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது. எபி. 4:13. உலகின் குழப்பங்களுக்கு மேலாக அவர் ராஜரீகம் பண்ணுகின்றார். அனைத்தும் அவருடைய தெய்வீகப் பார்வைக்கு துலக்கமாயிருக்கிறது. அமைதியும் பெரியதுமான தமது நித்திய சிம்மாசனத்திலிருந்து அவர் தமக்கு மிக நலமென்று தோன்றுவதை கட்டளையிடிகின்றார். CCh 262.4
ஒரு அடைக்கலான் குருவியும் பரம பிதாவின் கவனமில்லாமல் கீழே விழுவதில்லை. சாத்தான் தேவன்பேரில் கொண்டுள்ள பகை, கேவலம் வாயில்லா பிராணிகளை அழிப்பதில் அவன் மகிழ்ச்சியடையுமாறு செய்கிறது. பறவைகள் தம் இனிய கானங்களால் நம்மை மகிழ்ச்சியுறச் செய்யும்படி தேவனுடைய பாதுகாப்பு அவைகளுக்கு அருளப்பட்டிருகிறது. அடைக்கலான் குருவிகளையும் அவர் மறப்பதில்லை. ஆதலால் பயப்படாதிருங்கள்; அனேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள் மத் 10:31. 8T. 263-273. CCh 263.1