சபைகளுக்கு ஆலோசனை

88/326

ஒற்றுமையைக் கொண்டுவரும் திருஷ்டாந்தம்

பல ஆண்டுகளுக்கு முன், கிறிஸ்துவின் அதிசீக்கிர வருகையில் விசுவாசம் கொணடவர்கள் கூட்டம் சிறியதாக இருந்த போழுது, டாப்ஷாம் (Topsham) மெயின் (Maine) என்ற இடத்தில் ஓய்வுநாள் ஆசரிப்போர் ஸ்டாக் பிரிட்ஜ் ஹெளலாண்ட் என்ற சகோதரருடைய வீட்டு சமையல் அறையில் ஆராதனைக்காக கூடி வந்தனர். ஓர் ஓய்வுநாட் காலையில் சகோதரர் ஹெளலாண்ட் வரவில்லை. அவர் எப்பொழுதும் நேரத்தோடு வருபவராதலால், அவர் வராமற் போனது பற்றி நாங்கள் வியப்புற்றோம். சிறிது நேரம் கழித்து, அவர் உள்ளே நுழைந்தார். அவர் முகம் தேவ மகிமையால் சுவாலித்து விளங்கியது. அவர் பேசத் தொடங்கி, சகோதரரே, நான் அதைக்கண்டு பிடித்தேன் நாம் செய்யப்போகும் காரியத்திற்கு நீங்கள் ஒருகாலும் இடறி விழுவதிலை என்ற தேவனுடைய வசனத்தின் ஆதாரம் இருக்கிறது. நான் உங்களுக்கு அதை சொல்லப் போகிறேன் என்றார். CCh 251.3

அவர் கூறியதாவது, ஒரு ஏழை செம்படவச் சகோதரன் தன்னை ஒருவரும் மேன்மையாக மதிக்க வேண்டிய அளவு மதிக்கிறதில்லை யென்றும், சகோதர ஹெளலாண்டும், வேறு சிலரும் தன்னை விட மேலானவர்களாக தங்களைப் பற்றி நினைத்துக்கொள்வதாக எண்ணிக்கொண்டிருந்தானாம். உண்மையில் அது அப்படியன்று. ஆனால், நாங்கள் அவ்விதமாய் இருப்பதாக அவனுக்குத்ட் தோன்றிற்று. ஆகையால், பல வாரங்களாக கூட்டங்களுக்கு அவன் ஆஜராகவில்லை. ஆகையால் சகோதரர் ஹெளலாண்ட் அவன் வீட்டிற்குப் போய் அவனுக்கு முன்பாக முழந்தாள் படியிட்டு, என் சகோதரனே, உனக்கு விரோமாக நான் என்ன செய்தேன். எனக்கு மன்னிப்புக் கொடு என்று சொன்னார். உடனே அந்தச் சகோதரன் அவர் கையைப் பிடித்து, அவரை எழுப்பி நிற்கச் செய்யப் பார்த்தான். முடியாது என்றார் சகோதரர் ஹெளலாண்ட். உமக்கு என்மேல் என்ன வருத்தம்? உமதுபேரில் எனக்கு வருத்தம் யாதொன்றும் இல்லையே ஆனால் ஏதோ வருத்தம் கட்டாயம் உம்மிடத்தில் இருக்கிறது. முன்பெல்லாம் நாம் ஒருவரோடொருவர் வினவிக் கொள்வோமே, இப்பொழுது என்னிடம் நீர் பேசுவதில்லையே, காரணம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன் என்றார் சகோதரர் ஹெளலாண்ட். CCh 252.1

அவன் எழுந்திருங்கள் சகோதரன் ஹெளலாண்ட் என்றான். முடியாது, எழுந்திருக்க மாட்டேன் என்றார், சகோதரர் ஹெளலாண்ட். அப்படியானால், நான் தாழ வேண்டியது தான் என்று சொல்லிக் கொண்டு அவன் முழங்காலில் நின்று, தான் சிறு பிள்ளைத் தனமாக நடந்ததையும், பொல்லாங்கான பல எண்ணங்களைத்தன் மனதில் பேணி வைத்திருந்ததையும் அறிக்கையிட்டு, இப்போழுது, நான் அவையாவையும் அப்பால் எறிந்து விடுவேன் என்றான். CCh 252.2

இந்த கதையை சகோதரர் ஹெளலாண்ட் சொன்ன போது, அவர் முகம் கர்த்தரின் மகிமையால் பிரகாசித்தது. அதை அவர் சொல்லி முடித்த போது, அந்த செம்படவனும், அவன் குடும்பத்தினரும் உள்ளே வந்தனர். மிகவும் நேர்த்தியான கூட்டம் அன்று நடை பெற்றது. CCh 252.3

நம்மில் சிலர் சகோதரர் ஹெளலாண்ட் கடைப்பிடித்த இம்முறையை பின் பற்றி நடப்பதாகக் கொள்வோம். நம் சகோதரர்கள் தீமையைப் பிணைக்கும் போது, நாம் அவர்களிடம் போய் உங்களுக்கு தீமை வர நான் ஏதாவது செய்திருந்தால் எனக்கு மன்னியுங்கள் என்று சொன்னால், சாத்தானின் மயக்கத்திலிருந்தும், அவனது சோதனைகளிலிருந்தும் நம் சகோதரர்கள் அனேகர் விடுபட்டு சுயாதீனம் அடைவார்கள். உன் சகோதரனுக்கும் உனக்கு இடையில் எவ்விதக் காரியமும் தடையாக நிற்க இடம் கொடாதே. சந்தேகக் குப்பைகளை அப்புறப் படுத்துவதற்கு தியாகத்தின் வாயிலாக நீ செய்யக் கூடியது ஏதாவது இருக்குமானால், அதைச் செய். நாம் ஒருவரையொருவர் சகோதரர்களாக பாவித்து அன்புகூர தேவன் எதிர் பார்க்கிறார். நாம் இரக்கமும், மரியாதையுமுள்ளவர்களாக இருக்கும்படி தேவன் விரும்புகிறார். நம் சகோதரர்கள் நம்மை நேசிக்கிறார்கள் என்றும் கிறிஸ்து நம்மை நேசிக்கிறார் என்றும் நாம் நம்ப நம்மை நாமே அறிவுறுத்திக்கொள்ள தேவன் விரும்புகிறார். அன்பு அன்பைப் பிறப்பிக்கும். CCh 253.1

நாம் நம் சகோதரரை பரலோகத்தில் சந்திக்க எதிர்பார்க்கிறோமா? இங்கு நாம் அவர்களோடு சமாதானமாக இணங்கி ஜீவித்தால் அங்கும் அவர்களோடு வாழக் கூடும். ஆனால் நாம் இங்கு ஓயாத சண்டை சச்சரவின்றி ஜீவிக்க முடியாதென்றால், பரலோகத்தில் அவர்களுடன் எவ்வாறு வாழ முடியும்? தங்களைத் தங்கள் சகோதரர்கள் நடுவிலிருந்து பிரித்து, இணங்காமை, கலகம் என்பவைகளை பிறப்பிக்கும் துர் போக்குள்ள நடத்தையைப் பின்பற்றுபவர்கள் பூரண மனம் மாறுதல் அடைவது அவசியம். கிறிஸ்துவின் அன்பினால் நம் உள்ளம் உருகிப் பணிய வேண்டும். கல்வாரிச் சிலுவையில் நமக்காக இயேசு சாகும்போது நமது பேரில் காண்பித்த அன்பை நாம் பேண வேண்டும். இரட்சகரண்டை அடுத்து நெருங்கிச் சேர வேண்டும். நாம் அதிகம் ஜெபித்து, விசுவாசத்தை அப்பியாசிக்கப் படிக்க வேண்டும். நாம் இருப்பதிலும் அதிகமான பட்சம், இரக்கம், மரியாதை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இவ்வுலகில் நாம் ஒரு முறை தான் கடந்து போவோம். கிறிஸ்துவின் குணலட்ஷணம் நம்மோடு உறவாடுகிறவர்கள் மேல் பதியத் தக்கதாக நாம் முயற்சி செய்ய வேண்டாமா? CCh 253.2

கற்பாறை போன்ற இருதயங்கள் உடைய வேண்டும். நாம் பூரண ஐக்கியத்தில் ஒன்றுபட வேண்டும். நசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தினால் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டோம் என்று உணர்வது அவசியம். நாம் ஒவ்வொருவரும் பின்வருமாறு சொல்ல வேண்டும். அவர் எனக்காக் தம் உயிரைக் கொடுத்தார். என்னை அவருக்குச் சொந்தமாகக் கேட்கிறார். எனக்காக தம்மை அர்ப்பணம் செய்து தம்மை வெளிப்படுத்தின அன்பை நான் உலகில் யாத்திரை செய்து போகையில் வெளிப்படுத்தக் கேட்கிறார். கிறிஸ்து தம்மில் விசுவாசமாயிருக்கிறவர்களை நீதிமான்களாக்கி, நமது பாவங்களைத் தமது சரீரத்தில் சிலுவை மீது சுமந்து, இப்படியாக, தேவன் நீதிபரர் எனக் காட்டினார். கிறிஸ்துவுக்கு தங்களைத் தத்தம் செய்கிற அனைவருக்கும் ஜீவன், நித்திய ஜீவன் உண்டு. 9T. 191-193. CCh 254.1