சபைகளுக்கு ஆலோசனை

80/326

பாவ அறிக்கை யாரிடம் செய்வது?

பாவங்களை மறைத்து அவைகளுக்குச் சாக்குப்போக்கு சொல்லுகிறவர்களும், பரலோக புத்தகங்களில் பாவங்கள் அறிக்கை செய்யப்படாமலும், மனின்ககப்படாமலும் நிலைத்திருக்க இடம் கொடுப்பவர்களும் சாத்தானால் மேற்கொள்ளப்படுவார்கள். அவர்களின் உத்தியோகம் எவ்வளவு உயர்ந்ததோ; அவர்கள் வகிக்கும் உத்தியோகம் எவ்வளவு கண்ணிய மானதோ, அவ்வளவு அதிகமாக அவர்களது போக்கும் கடவுள் பார்வையில் கொடிதானதாகக் காணப்படும் தேவனுடைய நாளுக்கான ஆயத்தம் செய்வதில் யார் தாமதமா யிருக்கிறார்களோ அவர்கள் அவ்வாயத்தத்தை உபத்திரவகாலத்திலோ, அல்லது அதற்கு பின்போ அடைய முடியாது. அப்படிப்பட்டவர்களின் காரியங்கள் யாவும் நம்பிக்கையற்ற வையே G.C. 620. CCh 233.3

உங்கள் பாவங்களையும் தப்பிதங்களையும் அறியாதவர்களிடம் நீங்கள் அறிக்கையிடவேண்டுமென்று கேட்கப்படவில்லை. அவிசுவாசிகளை வெற்றி முழக்கம் செய்ய வழி நடத்துவதற்கேதுவாக உங்கள் பாவ அறிக்கைகளை வெளியிடுவது உங்கள் வேலை அல்ல. அவைகளை யாரிடம் அறிக்கை செய்வது அவசியமோ அவர்களிடம் அறிக்கை செய்யுங்கள். அவர்கள் உங்கள் தவறுதல்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் உங்களுக்காக ஜெபிக்கட்டும்; கடவுள் உங்கள் கிரியைகளை ஏற்றுக்கொண்டு உங்களைக் குணமாக்குவார். உங்கள் ஆத்துமாக்களினிமித்தம் நித்தியத்திற்கான பூரண வேலை நடக்கும்படி மன்றாடுங்கள். உங்கள் கர்வம், மாய்கை யாவையும் விட்டு நேர்மையான வேலை செய்யுங்கள். மீண்டும் வந்து மந்தைக்குள் சேர்ந்து கொள்ளுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளும்படி மேய்ப்பர் காத்துக்கொண்டிருக்கிறார். மனந்திரும்பி முந்தின கிரியைகளைச் செய்து, தேவனிடம் தயவைப் பெற்றுக்கொள்ளுங்கள். 2T.296. CCh 234.1

கிறிஸ்து உங்கள் இரட்சகர்; நீங்கள் உங்களைத் தாழ்த்தி பாவ அறிக்கை செய்தால் அவர் உங்களை ஏளனம் செய்யார். உங்களிடம் இரகசிய பாவமூண்டானால், தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தரான கிறிஸ்துவிடம் அறிக்கையிடுங்கள். “ஒருவன் பாவம் செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.” 1யோவான் 2:1 நீங்கள் தேவனுக்குச் சொந்தமான தசம பாகங்களையும் காணிக்கைகயும் வஞ்சித்துப் பாவம் செய்வீர்களானால், உங்கள் குற்றத்தைத் தேவனிடமும் சபையிலும் அறிக்கைசெய்து அவர் கொடுத்திருக்கும் கட்டளையைக் கவினயுங்கள். “தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலையில் கொண்டுவாருங்கள்.” மல்.3:10.C.H.374. CCh 234.2

தேவனுடைய ஜனங்கள் காரியங்களை அறிந்துகொண்டவர்களாக நடக்க வேண்டும். அவர்கள் அறிந்திருக்கும் பாவத்தை அறிக்கை செய்யும் வரை திருப்திகொண்டிருக்கக் கூடாது. அப்படி அறிக்கை செய்தவர்களுக்கு இயேசு தங்களை ஏற்றுக்கொண்டார். என்று நம்பும் சிலாக்கியமும் கடமையும் உண்டு. அவர்கள் மற்றவர்கள் இருளிலிருந்து முன்னேறி வெற்றியடைந்து அனுபவத்தில் ஆனந்தங்காணுமட்டும் அவர்களுக்காகக் காத்திருக்கக்கூடாது. அப்படிச் செய்வதினால் கிடைக்கும் மகிழச்சி கூட்டம் முடிவடையும் மட்டுமே நிலைக்கிடைக்கும் மகிழ்ச்சி கூட்டம் முடிவடையும் மட்டுமே நிலைக்கும். உள்ளக் கிளர்ச்சியினாால் அல்ல,இலட்க்ஷியத்தினால் கடவுளுக்குப் பணியாற்ற வேண்டும். உங்கள் குடும்பத்திலேயே காலை மாலை உங்கள் வெற்றியை அடைந்தாக வேண்டும். இதைச் செய்வதில் உங்கள் தினசரி தொழில் உங்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம். ஜெபிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி ஜெபிக்கும்போது தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்கிறார் என்று நம்புங்கள். உங்கள் ஜெபத்துடன் விசுவாசம் கலந்திருக்கட்டும். உடனே பதில் கிடைத்ததாக எல்லாச் சமயத்திலும் நீங்கள் உணராமற்போகலாம்; ஆனால் அப்பொழுது தான் உங்கள் விசுவாசம் பரீட்சிக்கப்படுகிறது. 1T.167. CCh 235.1