சபைகளுக்கு ஆலோசனை
கிறிஸ்துவின் முறைப்படி சபையில் ஒழுங்கு நடவடிக்கை
சபையில் தவறும் அங்கத்தினரைக் கையாடுவதில், தேவனுடைய ஜனங்கள் அதிக ஜாக்கிரதையாக மத்தேயு 18-ம் அதிகாரத்தில் இரட்சகர் கொடுத்துள்ள போதனையை பின்பற்ற வேண்டும். CCh 227.1
மானிடர் கிறிஸ்துவின் சொத்தாக அவரால் விலை மதிக்கப்படா கிரயம் செலுத்தி வாங்கப்பட்டவர்கள். அவர்கள் பிதாவும், குமாரனும் காட்டிய அன்பினால் இயேசுவண்டைய இணைக்கப்பட்டிருக்கின்றனர். அது அப்படியானால் நாம் ஒரு வரை ஒருவர் கையாளுவதில் எவ்வளுவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! மனுஷர் தங்கள் உடனொத்தவர்கள் விஷயத்தில் சந்தேகங்களைக் கிளப்ப கொஞ்சமேனும் உரிமையுள்ளவர்களல்ல. CCh 227.2
தவறிப்போன தங்கள் உடன் விசுவாசிகளை நடத்துவதில் தங்கள் சொந்த விருப்பம், மன வேகம் இவற்றைப் பின்பற்றக் கூடாது. குற்றம் செய்வோரைத் திருத்துவதில் ஈடுபட்டிருக்கும்பொழுது அவர்களைக் குறித்த தங்கள் துரபிமானத்தை வெளியிடக்கூடாது. அவ்வாறு செய் வதால் புளித்தமாவு போன்று நமது தவறான எண்ணங்களை பிறர் மனதிலும் உண்டு பண்ணுகிறோம். சபையிலுள்ள ஒரு சகோதரனைப்பற்றியோ சகோதரியைப்பற்றியோ சாதகமற்ற அறிக்கைகளை சபை அங்க அங்கத்தினர் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுகின்றனர், கர்த்தராகிய இயோசு கிறிஸ்துவினால் கொடுக்கப்பட்ட ஒழுங்கைப் பின்பற்ற சிலர் மனமற்றிருப்பதால், தவறுகள் விளைந்து, அநீதி செய்யப்படுகின்றது. கிறிஸ்து சொல்லுகின்றார்: “உன் சகோதரன் உனக்கு விரோதமாக்க குற்றஞ் செய்தால் அவனிடத்தில் போய் நீயும் அவனும் தனித்திருக்கையில் அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து.” மத்.18:15. அவன் குற்றத்தைப் பிறரிடம் சொல்லாதே. ஒருவரிடம் சொல்ல, அவர் அடுத்தவரிடமும், அவர் அதற்கடுத்தவாடிடமும் சொல்லி, அந்த அறிக்கை சதா வளர்ந்து, தீமை பெருகி, முழுச் சபையும் பாதிக்கப்படுகின்றது. “நீயும் அவனும் தனித்திருக்கையில்” காரியத்தைத் தீர்த்துகொள்ளவ்ணடுமென்பது தேவனுடைய திட்டம். “வழக்காடப்பதஷ்டமாய் போகாதே, முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும் பொழுது நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. நீ உன் அயலானுடனே மாத்திரம் உன் வியாஜ்ஜியத்தைக் குறித்து வழக்காடு. மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.” நீதி.25:8,9. உன் சகோதரன் மேல் பாவமிருக்கச் சகிக்காதே.” ஆனால் அவனை வெட்கப்படுத்தாதே. இவ்விதமாகச் செய்யின் நீ திருத்துவதற்குப் பதிலாக பழி வாங்குவது போல் காணப்பட்டு, உன் சிக்கலை அதிகப்படுத்திக் கொள்ளுவாய். தேவ வசனத்தின் திட்டப்படியே அவனைத் திருத்து. CCh 228.1
கோபம் பாவமாக மாற இடங்கொடாதே. காயம் சீழ்ப்பிடித்து, நச்சு வார்த்தைகளாக வெளிப்பட்டு, பரவி, கேட்போர் மனதைக் கறைப்படுத்த இடங்கொடாதே. கசப்பான எண்ணங்கள் உன் மனதிலும் அவன் மனதிலும் நிரம்பும்படி இடங்கொடாதே. உன் சகோதரனிடத்தில் போய்த் தாழ்மையுடனும் நேர்மையுடனும் காரியத்தைக் குறித்துப் பேசு. CCh 229.1
குற்றம் எத்தன்மையானதாக இருந்தாலும், அது, தப்பு அபிப்பிராயங்களையும், தனிப்பட்ட நபர்களுக்கு உண்டு பண்ணின தீங்குகளையும் தீர்ப்பதற்குத் தேவன் வைத்திருக்கும் ஒழுங்கை மாற்றாது. குற்றம் செய்த ஒருவரிடம், தனித்து, கிறிஸ்துவின் ஆவியோடு பேசும்போது கஷ்டம் தீரும். குற்றம் செய்த ஒருவரிடம் கிறிஸ்துவின் அன்பினாலும், அனுதாபத்தினாலும் நிறைந்த இருதயமுள்ளவனாய் போய் காரியத்தை சரிப்படுத்திக்திக் கொள். அமைதியாகவும், பொறுமையாகவும் அவனுக்குக் காரியத்தை விளக்கு. உன் உதடுகளிலிருந்து கோபமான வார்த்தைகள் தவறி விழ வேண்டாம். அவனுடைய மேலான தீர்மானத்திற்கு ஏற்கத்தக்கதாக அழுத்திப் பேசு.” தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத்திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்” என்ற வார்த்தைகளை நினைத்துக்கொள். CCh 229.2
அதிருப்தி என்னும் நோயை நிவிர்த்திக்கும் மருந்தை உன் சகோதரனிடத்திற்கு எடுத்துச் செல். அவனுக்கு உதவி செய்வதில் உன் பாகத்தைச் செய். சபையின் ஐக்கியத்திற்காகவும், சமாதானத்திற்காகவும் இப்படிச் செய்வது உன் கடமையும், சிலாக்கியமுமாகும். அவன் உனக்குச் செவி கொடுத்தால் நீ அவனை உன் நண்பனாக்கிக்கொண்டாய். CCh 229.3
தீங்கு செய்தவனையும், தீங்கிழைக்கப்பட்டவனையும் கூட்டிப் பேசும் காரியத்தில் பரலோகமெல்லாம் உற்சாகம் காட்டுகிறது. தவறு செய்வதன் கிறிஸ்துவின் அன்புடன் கொடுக்கப்படும் கடிந்து கொள்ளுதனை ஏற்றுக்கொண்டு, செய்த தவறை ஒப்புக்ககொண்டு, தேவனிடத்திலும், சகோதரனிடத்திலும் மன்னிப்பு பெற்றுக்கொள்ளும்போது, அவனது இருதயத்தைப் பரலோக ஒளி நிரப்பும். போராட்டம் முடிவடைந்து, நம்பிக்கையும், சிநேகமும் ஏற்படும். செய்தபிழையினால் ஏற்பட்ட புண்ணை அன்பின் எண்ணெய் ஆற்றும். பரிசுத்த ஆவி இருதயங்களை இணைக்கும்; இவ்விதம் ஏற்படுத்தப்பட்ட ஐக்கியத்தினால் பரலோகத்தில் துதி உண்டாகும். CCh 229.4
இவ்விதம் கிறிஸ்தவ ஐக்கியத்தில் இணைக்கப்பட்டவர்கள் தேவனை நோக்கி ஜெபித்து, நியாயம் செய்யவும், கிருபையை சிநேகிக்கவும், தேவனுக்கு முன்பாக தாழ்மையாய் நடக்கவும் தீர்மானம் செய்யும் போது, அவர்களுக்குப் பெரிய ஆசீர்வாதங்கள் வரும். பிறருக்கு விரோதமாக தப்பிதம் செய்தால், அவர்கள் ஒருவருக்கொருவர் நன்மை செய்யும் நோக்கத்துடன் மனந்திரும்புதல், அறிக்கை செய்தல், சீர்ப்படுத்துதல் இவைகளைத் தொடர்நது செய்ய வேண்டும். இப்படிச் செய்வதே கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுவதாகும். CCh 230.1
“அவன் செவி கொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே யாவும் நிலைவரப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.” CCh 230.2
மத்.18:16. ஆவிக்குரிய மனதுடைய ஒருவரை உன்னுடன் கூட்டிக்கொண்டு போய் தவறு செய்தவரிடம் அத் தவறைக் குறித்துப் பேசு. ஒன்றுபட்ட அவனது சகோதரர்களுக்கு அவன் இணங்கலாம். இந்த விஷயத்தில் ஒருமைப்பாட்டை அவன் கண்ட மாத்திரத்தில் அவன் மனது பிரகாசிக்கக்கூடும், CCh 230.3
“அவர்களுக்கும் அவன் செவி கொடாமற் போனால்,” என்ன செய்வது? சபைக் கமிற்றியாக சில அங்கத்தினர் கூடி தப்பிதத்திற்குட்பட்டவனைச் சபையினின்று நீக்கிவிடும் பொறுப்பைத் தங்கள் மேல் எடுத்துக்ககொள்ளல் ஆகுமோ? CCh 230.4
“அவர்களுக்கும் அவன் செவி கொடாமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து.” வச.17. தனது அங்கத்தினர் பேரில் சபை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கட்டும். CCh 230.5
“சபைக்கும் செவி கொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப் போலவும் இருப்பானாக.” வச.17 சபையின் வார்த்தைகளுக்குச் செவி சாயாமல் அவனை மீட்டுக்கொள்வதற்கான முயற்சிகளைத் தள்ளி விடுவானானால், அவனைச் சபையிலிருந்து தள்ளும் பொறுப்பு சபையின் மேல் இருக்கிறது. இதற்கு பின்பு, அவன் பெயர் சபை டாப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும். 7T.260-262. CCh 231.1