கிறிஸ்துவைச் சேரும் வழி
REJOICING IN THE LORD.
கர்த்தருக்குள் களிகூருதல்.
தேவனுடைய பிள்ளைகள் கர்த்தருடைய நன்மையையும் இரக்கத்தையும் காண்பிக்கிற கிறிஸ்துவின் பிரதிநிதிகள் என்றழைக்கப்படுகிறார்கள். பிதாவின் குணாகுணங்களை இயேசு நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறதுபோல, கிறிஸ்துவின் உருக்கம், இரக்கம், அன்பு முதலான சுகுணங்களையறியாத உலகத்துக்கு நாமே அவரை வெளிப்படுத்த வேண்டியவர்களாயிருக்கிறோம். “நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்,” “என்னை நீர் அனுப்பினதையும் நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல, அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.” யோ. 17: 18, 23 என்று இயேசு மன்றாடினார். பவுல் அப்போஸ்தலன் இயேசுவானவருடைய சீஷர்களுக்கு கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்கள் என்று வெளியரங்கமாயிருக்கிறது,” “சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப் பட்டுமிருக்கிற எங்கள் நிருபம் நீங்கள் தானே.” 2 கொரி. 3: 3,2 என்பதாகச்சொல்லுகிறார். இயேசு தமது ஒவ்வொரு பிள்ளைகள் மூலமாயும் உலகத்தாருக்கு நிருபம் அனுப்புகிறார். நீங்கள் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாயிருந்தால், உங்கள் மூலமாக நீங்கள் வாசம்பண்ணுகிற குடும்பத்துக்காவது கிராமத்துக்காவது, தெருவுக்காவது நிருபமொன்றையனுப்புகிறார். இயேசு உனக்குள்ளே வாசம்பண்ணி தமக்கு அறிமுகமில்லாதவர்களுடைய இருதயத்திலே பேசவிரும்புகிறார். ஒரு வேளை அவர்கள் வேதாகமத்தை வாசிக்கிறதில்லையாக்கும்; அல்லது அவைகளின் தாள்களில் எழுதப்பட்டவைகளின் மூலமாய் அவர் தங்களோடு பேசும் சத்தத்தைக் கேட்கிறதில்லையாக்கும். தேவனுடைய அரிய அன்பை அவருடைய கிரியைகளின் மூலமாகப் பார்க்கிறதுமில்லையாக்கும்; இருக்கட்டும். நீ இயேசுவுக்கு உண்மையான ஸ்தானாபதியாயிருப்பாயானால், உன்னாலே அவர்கள் அவருடைய நன்மைகளைக் குறித்துக் கொஞ்சமாகிலும் அறிந்து கொள்வத்ற்கு ஏவப்படலாம். அவர்கள் அவரை நேசிக்கவும் அவருக்கு ஊழியஞ்செய்யவும் நீ அவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளலாகும். SC 200.1
கிறிஸ்தவர்கள் பரத்துக்கேகும் மார்க்கத்திலே நாட்டப்பட்டிருக்கும் தீபஸ்தமபமானவர்கள். கிறிஸ்துவிடத்திலிருந்து தங்கள் மீது வீசும் ஜோதிப்பிரகாசத்தை உலகத்துக்குப் பிரதிபிம்பிக்க வேண் டியவர்கள் இவர்களே. கிறிஸ்துவைப்பற்றியும், அவருடைய சிறந்த ஊழியத்தைப்பற்றியும் சரியான அறிவையும் உணர்வையும் இதர ஜனங்கள் அடையத்தக்கதாக அவர்கள் ஜீவியமும் குணசீலங்களும் அமைந்திருத்தலவசியமே. SC 201.1
கிறிஸ்துவானவருக்காக நாம் பிரதிநிதிகளாய் ஏற்படுவோமாகில், அவருடைய ஊழியம் எப்படி இருந்த்தோ அப்படியே கவர்ச்சியுள்ளதாய்க் காணும்படி அதை நாமும் ஆக்கிக்கொள்வோம். தங்கள் ஆத்துமாக்களிடத்தில் துக்கத்தையும் துயரத்தையும் சஞ்சலத்தையும் வியாகுலத்தையும், முறுமுறுப்பையும் ஆவலாதியையும் சேர்த்துக்கொள்ளுகிற கிறிஸ்தவர்கள் மற்ற ஜனங்களுக்கு தேவனைப்பற்றிய தப்புரையான அபிப்பிராயத்தையும், பொய்யான கிறிஸ்தவ ஜீவியத்தையும் காட்டுகிறவர்களாயிருக்கிறார்கள். தேவனுடைய பிள்ளைகள் சந்தோஷமாயிருப்பது அவருக்குப் பிரியமில்லாததாக அவர்கள் தங்கள் கிரியைகளினால் பாவிக்கிறார்கள். இவ்விஷயத்தில் அவர்கள் நம்முடைய பரமபிதாவுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகிறார்கள். SC 202.1
சாத்தானானவன் தேவனுடைய பிள்ளைகளை அவநம்பிக்கைக்கும், மனச்சோர்புக்குமுள்ளாக்க்க் கூடியவனாகிறபோது களிப்படைகிறான். நாம் தேவனை நம்பாமல் அவருடைய பட்சத்தைக் குறித்தும், நம்மை இரட்சிக்கும் அவரது வல்லமையைக் குறித்தும் சந்தேகங்கொள்ளுகிறதைக் கண்டு, மகிழ்ச்சி கொள்ளுகிறவனாயிருக்கிறான். அவர் தம்முடைய நடத்துதல்களினால் நமக்குத் தீங்கு செய்கிறவர் என்று முறையிடுவதைக் கேட்கவிரும்புகிறான். கர்த்தர் மன உருக்கமும் பரிதாபமுமில்லாதவர் என்று சொல்வதே சாத்தானுடைய வேலை அவரைக் குறித்த சத்தியத்தைப் புரட்டிப் பேசுவான். பரமபிதாவைக் குறித்த சத்தியத்தையல்ல, பொய்யை நமதுள்ளத்திலே நிரப்பி, தப்பான தாற்பரியங்களினால் நம்மைப் பிதற்றிவிடுவான். நமதெண்ணங்களை தாறுமாறாக்கிவிடுவான். நாமுங்கூட சாத்தானுடைய அபத்தமான பேச்சை நம்பி, நமதெண்ணங்களை அதின்மேல் நாட்டி அவரை விசுவாசியாமல் அவமதித்து, அவருக்கு விரோதமாக முறுமுறுக்கிறதுமுண்டல்லவா. நம்முடைய சன்மார்க்க ஜீவியம் நமக்கு மந்திரமாகவும் கேவலமாகவுமிருக்கும்படி சாத்தான் எப்போதும் வகைதேடித்திரிகிறான். அந்த பக்திக்குரிய ஜீவியம் வருத்தமும் பாரமும் கடினமுமாகக் காண்பிக்கும்படி பார்க்கிறான். கிறிஸ்தவன் ஒருவன் தன் ஜீவியத்தை இவ்வித எண்ணத்தினால் கழிக்கிறபோது, தன் அவ நம்பிக்கையினாலேயே சாத்தா னுடைய பொய்யை ஒத்துக்கொள்ளுகிறவனாகிறான். SC 203.1
ஜீவ வழியில் நடக்கிற அநேகர் தங்கள் தப்பிதங்களையும் விழுதல்களையும் நம்பிக்கைக்கேட்டையும் சிந்தனை செய்துகொண்டு வருவதினால் அவர்கள் இருதயம் வியாகுலத்தினாலும் அதைரியத்தினாலும் நிறைந்துபோகிறது. நான் ஐரோப்பாவில் இருந்தபோது இப்படி செய்துகொண்டிருந்த ஒரு சகோதரி துயரடைந்து தனக்கு ஆறுதலான சில வார்த்தைகளை நான் எழுதும்படி எனக்கு எழுதி கேட்டுக் கொண்டாள். நான் அவள் கடிதத்தை வாசித்த அடுத்த இரவில், நான் ஒரு தோட்ட்த்தில் இருக்கிறதாகவும் அந்தத் தோட்டத்துக்குச் சொந்தக்காரனாகத் தோன்றினவன் அதின் வழியாய் என்னை நடத்திக்கொண்டு போனதாகவும் ஒரு கனாக்கண்டேன். அவன் அந்தத்தோட்ட்த்தில் பூக்களைச்சேர்த்துக்கொண்டும் அவைகளை முகர்ந்துகொண்டும் போகிறபோது இந்த சகோதரி என் பக்கத்தில் நடந்து நான் நடக்கும் வழியில் இடைஞ்சலாகப் படர்ந்து கிடந்த நெருஞ்சில் முட்களைப் பார்க்கும்படி என்னை எச்சரித்தாள். அங்கே அவள் நின்றுகொண்டு அழுது புலம்பினாள். வழிகாட்டிக்குப் பின்னால் பாதையிலேயே நடந்துபோகாமல் நெருஞ்சில்களிலும் முட்களிலும் நடந்துபோனாள். அவைகள் காலில்தைக்க, ஐயோ! என்று அலறி, “இந்த அழகானதோட்ட்த்தில் இந்த முட்கள் கிடக்கிறது எவ்வளவு பரிதாப மான காரியம்” என்று சொன்னாள். அப்போது அந்த வழிகாட்டி, “காலில்தைக்கும் முட்களை விட்டுவிடு அவைகள் கிடக்கட்டும். ரோஜா, லீலி முதலான புஷ்பங்களைச் சேர்த்துக்கொள்” என்றான். SC 204.1
உன் அநுபவத்திலே பிரகாசமான காரியங்கள் இருந்த்தில்லையா? தேவாவியானவருக்கு மறுமொழியாக உன் இருதயம் சந்தோஷத்தினால் நிறைந்திருந்தபோது உல்லாசமும் மனமகிழ்ச்சியுமானவேளை உனக்கு இருந்த்தில்லையா? எழுதப்பட்டிருக்கிற உன் ஜீவிய அனுபவ அதிகாரங்களைத் திறந்து பார்க்கையில் மிகவும் இன்பமான சில பக்கங்ளுள்ள ஏடுகளை நீ காண்பிக்கிறதில்லையா? தேவன் அருளிச் செய்திருக்கிற வாக்குத்தத்தங்கள் எப்பக்கத்திலும் வழியோரமாக வளர்ந்திருக்கிற வாசனையுள்ள மலர்களைப்போலிருக்கின்றன வல்லவா? அவைகளின் அழகும் இன்பமும் உன் இருதயத்தைச் சந்தோஷத்தினால் நிரப்பும்படி இடங்கொடுக்கமாட்டாயா? SC 205.1
நெருஞ்சில்களும் முட்களும் வேதனையையும் விசனத்தையுமே யொழிய வேறொன்றையும் தராது. இவைகளைமாத்திரம் நீ சேர்த்து மற்றவர்களுக்குக் கொடுப்பாயானால் நீ தேவனுடைய நன்மைகளை நீயே துரந்து விடுவது மாத்திரமல்ல, உன்னைச் சுற்றிலுமிருக்கிறவர்கள் ஜீவ வழியில் நடக்காதபடி தடைசெய்கிறவனாயுமிருப்பாய். SC 205.2
கடந்த காலத்தின் ஜீவியத்திலுள்ள அக்கிரமங்கள் நம்பிக்கைக்கேடு முதலான வெறுப்பான எல்லா சிந்தனைகளையும் ஒன்றாய்த் திரட்டி அவைகளை அருவருத்துத் தள்ளுமட்டும் அவைகளைக்குறித்து பேசுவதும் அவைகளுக்காக புலம்புவதும் ஞானமல்ல. நிலைகுலைந்த ஒரு ஆத்துமா அந்தகாரத்தினால் நிறைந்து தேவ ஒளி தனக்குள் பிரகாசிக்காதபடி தன்னை மூடிக்கொள்வதுமாத்திரமல்ல மற்றவர்கள் வழியிலும் இருளை வரவிடுகிறது. SC 205.3
தேவன் நமக்குக் காண்பித்திருக்கும், தெளிவான வெளிச்சத்திற்காக அவருக்கு ஸ்தோத்திரம்! நாம் அவைகளை ஓயாமல் பார்க்கும்படியாக, அவருடைய அன்பின் குறைவற்ற நம்பிக்கைகளைத் திரட்டிப்பார்ப்போம். மனிதனைச் சாத்தானின் வல்லமையிலிருந்து, மீட்கும்படியாகத் தேவகுமாரன் தமது பிதாவின் சிங்காசனத்தைவிட்டுத் தமது தெய்வீகத்தில் மனுஷீகத்தை ஏற்றுக்கொண்டதும், அவர்கள் நமக்காக அடைந்த ஜெயத்தினால், மனிதருக்கு வானத்தைத் திறந்து, தேவன் தமது மகிமையினால் நிறைந்திருக்கிற அந்த மேலான ஸ்தலத்தை மனித பார்வைக்கு வெளிப்படுத்தினதும், பாவத்தில் அமிழ்ந்திக்கெட்டிப்போன ஜாதியை அழிவின் குழியிலிருந்து தூக்கியெடுத்து நித்திய தேவனுடைய ஐக்கியத்திற் குக்கொண்டுவந்ததும், நமது இரட்சகரை பற்றும் விசுவாசத்தினால் தேவசோதனையச் சகித்த நம்மைக் கிறிஸ்துவின் நீதியினால் உடுத்தித் தமது சிங்காசனத்தில் உயர்த்தினதும், ஆகிய இவைகளே, நாம் தியானிக்க வேண்டுமென்று தேவன் விரும்பி நமக்குக்காண்பித்திருக்கும் வெளிச்சம். SC 206.1
நாம் தேவனுடைய அன்பைப்பற்றி சந்தேகிக்கிறபோதும் அவருடைய வாக்குத்தத்தங்களின் பேரில் அவநம்பிக்கை கொள்ளுகிறபோதும் நாம் தேவனை கனவீனப்படுத்தி அவருடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். ஒரு தாயைப்பற்றி பிள்ளைகள் அடிக்கடி ஆவலாதி சொல்லிக்கொண்டே யிருப்பார்களானால் அந்தத்தாய் என்ன நினைப்பாள். தான் பிள்ளைகளுடைய நன்மையைக் கோரவில்லை என்றும் தன் ஜீவகாலமெல்லாம் அவர்கள் நன்மைக்காகவும் சௌக்கியத்திற்காகவும் முயற்சிகள் எடுக்கவில்லை என்றும் பிள்ளைகள் நினைக்கிறார்களே என்று துக்க சாகரத்தில் அமிழ்ந்து நசித்துப் போவாள் அல்லவா? அவர்கள் அவளுடைய அன்பைக்குறித்துச் சந்தேகப்படுவார்களானால் அது அவளுடைய இருதயத்தை உடைத்துவிடுமல்லவா? எந்தப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளால் இப்படி நடத்தப்பட விரும்புவார்கள். நித்திய ஜீவனை நமக்கு அருளும்படி தம்முடைய ஒரே பேறான குமாரனைக் கொடுக்கும்படி ஏவப்பட்ட நம்முடைய பரம பிதாவின் அன்பைக்குறித்து அவநம் பிக்கைகொள்வோமானால் அவர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார். “தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக் கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பது எப்படி” என்று அப்போஸ்தலன் எழுதுகிறார். ஆயினும் எத்தனை பேர் தங்கள் வார்த்தைகளினால் சொல்லாவிட்டாலும் செய்கைகளினாலே “கர்த்தர் இதை எனக்காக அல்ல ஒருவேளை மற்றவர்களுக்காகச் செய்திருக்கலாம்.” ‘தேவன் மற்றவர்களிடத்தில் அன்புள்ளவராயிருக்கிறார். என்னிட்த்தில் அன்புள்ளவரல்ல்’ என்பதாக சொல்லுகிறவர்களாயிருக்கிறார்கள். SC 207.1
இவையும் உன்னுடைய சொந்த ஆத்துமாவுக்குதீமையை விளைவிக்கின்றன. எப்படியென்றால் சந்தேகமான ஒவ்வொரு வார்த்தையினாலும் பிசாசானவனுடைய சோதனைகளை நீயே அழைக்கிறாய் சந்தேகங்கொள்ளும் சிந்தனையை உனக்குள்ளே பலப்படுத்தி, பணிவிடைசெய்யும் தேவதூதனை உன்னிமித்தம் துக்கங்கொள்ளச் செய்கிறாய். சாத் தான் உன்னைச் சோதிக்கும்போது சந்தேகமான வார்த்தையாகிலும் அறிவீனத்தையாகிலும் பேசாதே. உன் மனக்கதவை அவனுடைய ஏவுதலுக்குத் திறந்துவைப்பாயானால் அதை அவநம்பிக்கையாலும் கலகத்தைமூட்டும் கேள்விகளினாலும் நிறப்பிவிடுவான். உன் மனோ உணர்ச்சியை வெளிப்படையாய்ப் பேசுவாயானால் நீ பேசுகிற ஒவ்வொரு சந்தேகமும் உன்னை எதிர்த்துத் தாக்குவதுமல்லாமல் மற்றவர்கள் ஜீவியத்தில் முளைத்தெழும்பி பலன் கொடுக்கும் வித்தாகிவிடுகிறது. உன் வார்த்தைகளால் உண்டான இக்கேட்டை விலக்குவது பிறகு அசாத்தியமாகிவிடும். சாத்தானுடைய கண்ணியிலிருந்தும் சோதனையின் காலத்திலிருந்தும் உன்னையே தப்புவிக்கவேண்டியதாயிருக்கும். உன் சொல் வாக்கினாலே வசியப்பட்டுப்போன மற்றவர்கள் நீ எடுத்துக்காட்டிய அவிசுவாசத்திலிருந்து தப்பிக்கொள்ள முடியாமலே போய்விடுவார்கள். ஆவிக்குரிய பலத்தையும் ஜீவனையும் கொடுக்கிற அந்த மேலான காரியங்களைக் குறித்துப் பேசிக்கொள்வது எவ்வளவு விசேஷமானது. SC 208.1
உன் பரம எஜமானைக் குறித்து உலகத்துக்குக் கொடுக்கிற சாட்சி என்ன விதமானது என்று அறிய விரும்பி தேவதூதர்கள் உற்றுக்கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். உன்னுடைய சம்பாஷணை உனக்காகப் பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிற ஜீவனையுடையவரைக்குறித்ததாகவிருக்கட்டும். நீ ஒரு சிநேகிதன் கைபிடித்து வந்தனஞ் செய்கிறபோது உன் இரு தயத்திலும் உன் உதடுகளிலும் தேவனுக்குத் துதி புறப்படட்டும். இது உன் சிநேகிதன் சிந்தனையை இயேசுவினிடத்தில் இழுத்துக்கொள்ளும். SC 209.1
எல்லாருக்கும், உபத்திரவங்களுண்டு, துக்கங்களைச் சகிப்பது கஷ்டம், சோதனைகளுக்கு எதிர்த்து நிற்பது வருத்தம். உன் கஷ்ட நஷ்டங்களை உன்னைப் போல சாவுக்குரியவர்களிடத்திலல்ல எல்லாவற்றையும் ஜெபத்தினாலே தேவனிடத்திற்கே கொண்டு போவாயாக. சந்தேகமான ஒரு வார்த்தையையாவது அதைரியங்கொடுக்க்க்கூடிய ஒரு வசனத்தையாவது சொல்லமாட்டேன் என்று ஒரு தீர்மானஞ்செய்து கொள். நம்பிக்கையுள்ள வார்த்தைகளினாலும் பரிசுத்தமான உற்சாகத்தினாலும் மற்றவர்கள் ஜீவியத்தைப் பிரகாஸிப்பித்து அவர்கள் முயற்சிகளை சிறப்பிக்கும்படி செய்யலாம். SC 210.1
சோதனையினாலே கடினமாய் நெருக்கப்பட்ட தைரியமுள்ள ஆத்துமாக்கள் அநேகமுண்டு. நான் என்னும் சோதனையிலும் பொல்லாத அதிகாரங்களினால் உண்டான போரிலும் கொஞ்சங்குறைய மூர்ச்சையடைந்த ஆத்துமாக்களுண்டு. இந்த கஷ்டப்போரில் இருக்கிற ஒருவனையாவது நிலைகுலையச் செய்யாதே. தைரியமுள்ள வார்த்தைகளினால் அவனை உற்சாகப்படுத்தி, தன் வழியில் நடக்கும்படி தூண்ட்த்தக்க நம்பிக்கையுள்ள வார்த்தைகளைச்சொல்லு. இவ்விதமாக கிறிஸ்துவின் ஒளி உன்னிடத்திலிருந்து வீசும்படிபார். “நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதில்லை” (ரோ. 14: 7) நம்முடைய மனசாட்சி யறியாமலிருக்கிற செல்வாக்கினால் மற்றவர்கள் உற்சாகப்பட்டு பெலனடைந்திருக்கலாம், அல்லது உற்சாகங்குன்றி கிறிஸ்துவிலிருந்தும் சத்தியத்திலிருந்தும் விலகிப் போயிருக்கலாம். SC 210.2
கிறிஸ்துவின் ஜீவியம் குணலட்சணம் இவைகளைப்பற்றி தப்பான அபிப்பிராயமுள்ள அநேகருண்டு. அவர் அனலும் காந்தியும் இல்லாதவர். பிடிவாதமும், கடினமுமுள்ளவர், சந்தோஷமற்றவர் என்று நினைக்கிறார்கள். அநேகம் பேருடைய மார்க்க அனுபவத்தை இந்த மந்தமான எண்ணங்கள் மூடிக் கொண்டிருக்கின்றன. SC 211.1
இயேசு கண்ணீர் விட்டார் என்று சொல்லியிருக்கிறதேயொழிய சிரித்தார் என்று சொல்லப்படக் காணோம் என்று அடிக்கடி பேசிக்கொள்ளுகிறதுண்டு ஆம் நம்முடைய இரட்சகர் துக்கம் நிறைந்தவரும் பாடு அனுபவித்தவருமான மனிதனாகவேயிருந்தார். ஏனென்றால் எல்லா மனிதருடைய சாபத்தையும் தமது இருதயத்திலே சேரும்படி அதைத் திறந்தார். அவருடைய ஜீவியம் தன்னொடுக்கமும், கவலையும், வருத்தமும் நிறைந்த்தாகவிருந்தாலும் அவருடைய ஆவியோ நொறுக்கப்படவில்லை. அவருடைய முகச்சாயல் துக்கத்தினாலும் விசனத்தினாலும் வேறுபடாமல் சமாதானமுள்ள சாந்தத்தினால் களையாயிருந்த்து. அவருடைய உள்ளம் ஜீவன் ஊறும் ஊற்றாயிருந்தது. அவர் சென்ற விட மெல்லாம் இளைப்பாறுதலையும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுபோனார். SC 211.2
நம்முடைய இரட்சகர் பக்தியும் ஊக்கமும் நிறைந்த கர்த்தரேயொழிய துக்கமாவது எரிச்சலாவது உள்ளவரல்ல, அவரைப்போலிருக்க விரும்புகிறவர்களுடைய ஜீவியம் ஊக்கம் நிறைந்த விஷயங்கள் உள்ளதாகவிருக்கும். தங்களுடைய உத்தரவாதத்தை உணர்ந்து ஜீவிக்கிறவர்களுமாயிருப்பார்கள். பெருமை அடங்கிப்போம். கோஷ்டமான கொண்டாட்டமிராது, அடங்காப் பரிகாசமுமிராது. இயேசுவின் மார்க்கமோ ஆற்றைப்போன்ற சமாதானத்தைக் கொடுக்கும். சந்தோஷத்தினால் உண்டாகும் ஒளியை அணைக்காது, மகிழ்ச்சியை அமர்த்தாது. பிரகாசமான மலர்ந்த முகத்தை மந்தாரஞ் செய்யாது. கிறிஸ்து ஊழியங்கொள்ள வராமல் ஊழியஞ் செய்யவே வந்தார். அவருடைய அன்பு நம்முடைய இருதயத்தில் ஆளுகை செய்யும்போது அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம். SC 212.1
மற்றவர்கள் செய்த அநியாயத்தையும் பொல்லாங்குகளையும் நம்முடைய மனதிலே பேணிவைப்போமானால் கிறிஸ்து நம்மை நேசித்தாற்போல் அவர்களை நாம் நேசிப்பது கூடாத்தாக்க் காணும். ஆனால் நம்முடைய எண்ணங்கள் கிறிஸ்து நமக்குக் காட்டின அதிசய அன்பின்பேரிலும் இரக்கத்தின்பேரிலும் நிற்குமானால் அதே ஆவி மற்றவர்கள்பேரிலும் பாய்ந் தோடும். ஒருவருடைய குற்றத்தை ஒருவர் பாராமல், ஒருவரோடொருவர் அன்பும் மரியாதையுமுள்ளவர்களாய் நடந்துகொள்ளுவோம். மனத்தாழ்மையையும், சுயபலத்தின்பேரில் நம்பிக்கையையும் வைக்காமல், மற்றவர்களுடைய குற்றங்களை மன்னித்து பொறுத்துக்கொள்ளவேண்உம். இப்படி செய்யும் போது நம்முடைய சுயநயம் அடியோடே நீங்கி, நாம் பெருமனமும் பரோபகாரமுமுள்ளவர்களாவோம். SC 212.2
“கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிலிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்” (சங். 37: 3) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். “கர்த்தரை நம்பு” ஒவ்வொரு நாளுக்கும் அதினதின் பாரமும் கவலையும், கலக்கமுமுண்டு. நாம் ஒருவரையொருவர் சந்திக்கிறபோது நம்முடைய அல்ல்ல் தொல்லைகளைக் குறித்து எவ்வளவு அதிகமாய்ப் பேசிக்கொள்ளத் தீவிரிக்கிறோம். ஒருவேளை ஒருவன் மன இரக்கமும் அன்புமுள்ள மீட்பர் நமக்கில்லை; நம்முடைய விண்ணப்பங்களைப் பட்சத்தோடு செவிகொடுத்துக் கேட்கிறவருங் கிடையாது; நம்முடைய அவசர காலங்கள் ஒவ்வொன்றிலும் சகாயம் புரியத்தக்க வரும் காணோம்; நாம் எதிர்நோக்காத எத்தனையோ தொந்தரவுகள் வலிய மேல்விழுந்து வருகின்றன; எத்தனையோ திகில்கள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன என்று துக்கத்தில் மூழ்கி சஞ்சலத்தோடு சொல்ல்லாம். SC 213.1
சிலர் எப்பொதும் பயமும் நடுக்கமுமுடையவர்களாய் எதிர் நோக்காத உபத்திரவங்களுக்கு உள்ளாகிறார்கள். ஒவ்வொருநாளும் அவர்கள் தேவ அன்பினால் சூழப்பட்டிருந்தாலும், ஒவ்வொருநாளும் அவருடைய திவ்ய கிருபாகடாக்ஷங்களை அனுபவிக்கிறவர்களாயிருந்தாலும் இவ்வித ஆசீர்வாதங்களைக் கவனியாமலே போகிறார்கள். பயம் உண்டாகுமென்றெண்ணி அவர்களுடைய மனம் ஏதோ ஒரு வெறுப்பான காரியத்தின்பேரில் நின்றுவிடுகிறது. அல்லது மிகவும் அற்பமான சில தொந்தரவுகள் நன்றி செலுத்தவேண்டிய அநேக காரியங்களைக் காணக்கூடாதபடி அவர்கள் கண்களைக் குருடாக்கிவிடுகின்றன. அவர்கள் தாக்குகிற துன்பங்கள் அவர்களை தேவனண்டை ஒட்டுவதற்குப் பதிலாக, அவர்கள் கலங்கி தியங்கிக்கொண்டிருக்கிறபடியால், அவரைவிட்டு அவர்களைப் பிரித்துவிடுகின்றன. SC 214.1
நாம் இப்படி அவிசுவாசமுடையவர்களாயிருப்பது நல்லதா? நாம் ஏன் நன்றிகேடராயும் அவநம்பிக்கையுடையவர்களாயு மிருக்கவேண்டும். இயேசுவானவர் நம்முடைய நண்பன். பரலோக முழுவதும் நம்முடைய க்ஷேமத்தையே கோருகிறது. நம்முடைய ஒவ்வொரு நாள் ஜீவியத்திலுள்ள மனக்கலக்கமும் தொல்லைகளும் மனதை அலட்டி, முகநாடியை வேறுபடுத்த நாம் இடங்கொடுக்கலாகாது. அப்படிச் செய்வோமானால் எப்போதும் ஏதாவது ஒன்று நம்மை அலட்டி அலைக்கழிக்கும். நம்மை அலட்டி தொந்தரவுபடுத்துகிறவர்களுக்கு இடங்கொடாமலிருக்கவேண்டும், ஏனெனில் அந்தச்சிந்தனைகள் நம்முடைய சோதனைகளைச் சகிக்க சகாயமாயிராது. SC 214.2
நீ உன் உத்தியோகத்தில் மலைக்கலாம்; உன்னுடைய பிற்கால வாழ்வைப்பற்றிய நம்பிக்கை வரவர மந்தமாகலாம்; நஷ்டம் உண்டாகும் என்கிற பயம் வரலாம்; ஆயினும் மனதைரியத்தை விட்டு விடாதே; திடமனதாயிருந்து உன் கவலைகளையெல்லாம் தேவன் பேரில் வைத்துவிட்டு அமைதலாயும் மகிழ்ச்சியாயுமிரு. உன்னுடைய காரியங்களை விவேகத்தோடே நடத்துவதற்கு ஞானத்துக்காக மன்றாடு. இவ்விதமாக நீ உனக்கு வர இருக்கும் நஷ்டத்தையும் ஆபத்தையுந் தடுக்கலாம். நல்ல பலன் கிடைப்பதற்காக உன்னாலாகக் கூடியது எதோ அதைச் செய்யும்படிப்பார். இயேசு தம்முடைய சகாயத்தைக் கொடுப்பதாக வாக்கருளியிருக்கிறார். நம்முடைய முயற்சியில்லாமல் தம்முடைய உதவியைக் கொடுக்கமாட்டார். நம்முடைய சகாயர்மேல் சார்ந்திருந்து உன்னாலானதைச் செய்தபோது பலனைச் சந்தோஷத்தோடே அங்கீகரித்துக் கொள்வாயாக. SC 215.1
தம்முடைய ஜனங்கள் கவலை என்னும் பாரம் சுமந்து தொய்ந்து போகவேண்டும் என்பது தேவனுடைய சித்தமல்ல. நம்முடைய கர்த்தரோ நம்மை வஞ்சிக்கிறவரல்ல அவர் நம்மைப்பார்த்து. “பயப்படாதிருங்கள்; உங்கள் வழிகளில் அபாயங்கள் இல்லை” என்று சொன்னதில்லை. நமக்குச் சோதனை களும் ஆபத்துகளும் உண்டென்று அவர் அறிந்து நம்மோடே தெளிவாய் நடந்துகொள்ளுகிறார். அவர் தம்முடைய ஜனங்களை பாவமும் தீமையும் நிறைந்த உலகத்திலிருந்து வெளியேறிவிடச் சொல்லாமல், அவர்களுக்கு ஒருக்காலும் தவறாத ஒரு அடைக்கலம் உண்டென்பதையே காட்டுகிறார். அவர் தம்முடைய சீஷர்களுக்காகச் செய்த ஜெபமாவது “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்” யோ. 17: 15 “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு; ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” யோ 16: 33 என்கிறார். SC 215.2
கிறிஸ்து தம்முடைய மலைப்பிரசங்கத்திலே, தேவன் பேரில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்பதின் அவசியத்தைப்பற்றி, தம்முடைய சீஷர்களுக்கு உத்தமபோதனை செய்திருக்கிறார். இந்தப் போதனைகள் எக்காலத்திலுமுள்ள அவருடைய பிள்ளைகளுக்கு தேறுதலாயிருக்கும்படி செய்யப்பட்டு, நமக்கும் போதனையும் ஆறுதலுமுள்ளதாயிருக்கும்படி அருளப்பட்டிருக்கிறது. இரட்சகர் தம்மை பின்பற்றினவர்களுக்குக் கவலையின்றி துதியின் கீதங்களைப்பாடி உல்லாசமாய்ப் பறந்துகொண்டிருந்த ஆகாயத்துப்பட்சிகளை கவனிக்கும்படி சொல்லி, “அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, ஆயினும் பரமபிதா அவைகளுக்கு வேண்டியவைகளை அருளுகிறார்” என்றார். இரட்சகர் “அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா” (மத். 6: 26) என்று அவர்களைக் கேட்கிறார். மனிதனுக்கும் மிருகங்களுக்கும் ஆகாரம் அளிக்கிற மகா போஷகர் தம்முடைய கரத்தை விரிவாய்த்திறந்து, தாம் உண்டாக்கின பிராணிகள் யாவற்றிற்கும் வேண்டியவைகளைக் கொடுக்கிறார். ஆகாயத்துப் பறவைகள் அவருடைய பாதுகாவலுக்கு தாழ்ந்தவைகளல்ல. அவர் அவைகளின் வாயிலே தீனியைப்போடுகிறதில்லை என்றாலும் அவைகளுக்கு வேண்டிய இரையை அகப்படும்படி செய்கிறாரே. அவைகளுக்காக இறைத்திருக்கிற தானியங்களை அவைகள் சேகரிக்கவேண்டும். தங்கள் கூடுகளைக் கட்டுவதற்கு வேண்டிய பொருட்களை அவைகள் தயார்செய்யவேண்டும். தங்கள் குஞ்சுகளுக்கும் தாங்களே இரை ஊட்டவேண்டும். உங்கள் பரமபிதா அவைகளைப் பிழைப்பூட்டுகிறபடியால் கீதங்கள் பாடிக்கொண்டே தங்கள் வேலைகளுக்குப் போகின்றன. “அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா” விவேகமும் அறிவுமுள்ளவர்களும் ஆவிக்குரிய ஆராதனை செய்யக்கூடியவர்களுமாகிய நீங்கள் ஆகாயத்துப்பட்சிகளைப் பார்க்கிலும் விசேஷித்தவர்களல்லவா? நம்மைச் சிருஷ்டித்து, ஜீவனோடு காப்பாற்றி தம்முடைய சொந்த திவ்ய சாயலின்படி நம்மை உருவாக்கினவரை நாம் நம்பிப் பிடித்துக்கொள்வோமானால் நமக்கு அவசியமானவைகளைத் தராமற்போவாரா? SC 216.1
கிறிஸ்துவானவர் தம்முடைய சீஷர்களை நோக்கி, காட்டுப் புஷ்பங்களைக் கவனியுங்கள் அவைகள் எவ்வளவு செழிப்பாய் வளர்ந்துகிடக்கிறதென்றும், பரமபிதா அவைகளுக்குக் கொடுத்திருக்கிற அழகு எவ்வளவு மேலானது என்றும் பாருங்கள் என்றார். இவைகள் அவர் மனிதனுக்குக் காட்டும் அவருடைய அன்புக்கு அத்தாட்சிகள். ” காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறது என்று கவனித்துப் பாருங்கள்’, என்றார். சர்வ சாதாரணமான இந்தப் புஷ்பங்களின் அழகும் மகிமையும் சாலொமோன் அணிந்திருந்த உடுப்பின் மகிமையைப்பார்க்கிலும் meeமேலானது. மனிதகைத்தொழில் சாமர்த்தியத்தினால் செய்யப்பட்ட எந்த மகா ஆடம்பரமான ஆடையாபரணமும் தேவனுடைய சிருஷ்டிப்பாகிய புஷ்பங்களின் சுபாவ அழகுக்கு இணையாகமாட்டாது. ” அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்து வித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” (மத் 6:30) என்று இயேசு கேட்கிறார். ஒருநாள் இருந்து அழிந்து போகிற சாதாரண புஷ்பத்துக்குப் பரம சித்திரக்காராகிய தேவன் பல வர்ணங்களையும், மென்மையையும் கொடுப்பாரானால் தம்முடைய சாயலின் பிரகாரம் உண்டாக்கப்பட்டிருக்கிறவர்களைப்பற்றி எவ்வளவு அதிகமான கவலையும் கரிசனையுமுள்ளவராயிருப்பார் ? கிறிஸ்துவானவருடைய இந்தப்போதனை கவலையுள்ள யோசனைக்கும் கலக்கமும் சந்தேகமுமுள்ள அவநம்பிக்கை நிறைந்த இருதயத்துக்கும் கடிந்துகொள்ளுதலாயிருக்கிறது. கர்த்தர் தம்முடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் சந்தோஷமாயும் சமாதானமாயும் அடக்கமுடையவர்களாயுமிருக்கும்படி விரும்புகிறார். ” சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக்கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும் இவைகளை உங்களுக்குச் சொன்னேன் ” (யோ 14:27;15:11) என்று இயேசு சொல்லுகிறார். SC 218.1
தன்னுடைய நலத்தையே கோரி நாடித்தேடுகிற சந்தோஷம் கடமை என்னும் பாதைக்கு வெளியாயும், ஏற்றக்குறைவாயும், சஞ்சலமுள்ளதாயும், நிலையற்றதாயும் இருக்கிறது. அது பறந்துபோய்விட ஆத்துமா ஒண்டியாய்த் துக்கத்தை அனுபவிக்க நேரிடுகிறது. ஆனால் தேவனுடைய ஊழியத்திலே சந்தோஷமும் திருப்தியுமுண்டு. கிறிஸ்தவன் நிலையற்றபாதையில் நடக்கும்படி விட்டுவிடப்பட்டவனல்ல. அவன் வீணாக துக்கத்தையடைந்து ஏமாற்றும்படி அழைக்கப்பட்டவனுமல்ல. நாம் இந்த ஜீவியத்தில் சந்தோஷங்களையனுபவிக்கக் கூடாவிட்டாலும் வரப் போகிற ஜீவியத்தில் சந்தோஷங்களையனுபவிப்போம் என்கிற நிச்சயத்தோடிருப்போமாக. SC 219.1
இந்த உலகத்திலுங்கூட கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுடன் அந்நியொந்நியப்படுவதினால் அவர்களுக்குச் சந்தோஷமுண்டு. அவருடைய அன்பின் பிரகாசமும் அவருடைய சமுகத்தினால் உண்டாகும் ஆறுதலும் அவர்களுக்குண்டு. ஜீவியத்தின் ஒவ்வொருபடியும் கிறிஸ்துவண்டை நம்மைச் சேர்க்கிறது. அவருடைய அன்பின் ஆழமான அனுபவத்தையும் கொடுத்து ஆசீர்வாதமும் சமாதானமுமுள்ள வீட்டுக்குச் சமீபமாய் நம்மைக்கொண்டுவருகிறது. ஆதலால் நாம் நம்முடைய நம்பிக்கையை விட்டு விலகாமல், முன் நமக்கிருந்த நிச்சயத்தைப் பார்க்கிலும் திடமான நிச்சயத்தோடுமிருப்போமாக. ” இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார்” (1 சாமு.7:12) முடிவுமட்டும் எங்களுக்கு சகாயம் புரிவார். நாம் ஞாபக சின்னமான தூண்களை நோக்கிப் பார்ப்போமாக. கேட்டின் மகனுடைய கையிருந்து காப்பாற்றவும் நம்மைத் தேற்றவும் கர்த்தர் செய்தவைகள் எல்லாவற்றையும் நினைவுகூர்வோமாக. தேவன் நமக்குக் காட்டியிருக்கிற எல்லா இரக்க உருக்கங்களையும் நம்முடைய ஞாபகத்தில் புதிதாக வைத்துக் கொள்வோமாக. நம்முடைய கண்ணீர்களைத் துடைத்திருக்கிறார். நோவுகளைத் தணித்திருக்கிறார். கவலைகளை நீக்கியிருக்கிறார். பயங்களைப் போக்கடித் திருக்கிறார். நம்முடைய குறைகளை நீக்கியிருக்கிறார். ஆசீர்வாதங்களை அளித்திருக்கிறார். இவ்விதமாக நம்முடைய பிரயாணத்துக்கு வேண்டியவைகள் எவைகளோ அவை யாவற்றையும் ஏற்கனவே தந்திருக்கிறாரே. நமக்கு வரப்போகிற சோதனையினாலுண்டாகும் புது வியாகூலங்களை எதிர்நோக்க வேண்டுமேயொழிய வேறல்ல. மேலும் வரப்போகிறவைகளை எவ்வாறு எதிர்நோக்கிகொண்டிருக்கவேண்டுமோ அவ்வாறே கடந்துபோனவைகளையும் கவனித்து ” இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் ” ” உன் நாட்களுக்குத்தக்கதாய் உன்பெலனும் இருக்கும்” (உபா. 33:25) என்று சொல்லவேண்டும். நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பெலனுக்கு மிஞ்சின சோதனைவராது. நம்முடைய வேலையை எங்கே காண்கிறோமோ அங்கேயே அதைச் செய்து, என்ன வந்தாலும் சோதனையைச் சகிக்கத்தக்க பெலன் அருளப்படும் என்று நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கவேண்டும். SC 220.1
வரவர தேவனுடைய பிள்ளைகளுக்குப் பரலோகத்தின் வாசல்கள் திறந்துவைக்கப்பட்டு, மகிமையால் நிறைந்த இராஜனுடைய உதடுகளிருந்து, “வாருங்கள் என்பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே! உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் ” (மத். 25:34) என்கிற ஆசீர்வாதம் அவர்கள்காதுகள் கேட்க ஆநந்த கீதமாகப் புறப்படும். SC 221.1
அப்போது மீட்கப்பட்டவர்களுக்காக இயேசுநாதர் ஆயத்தம்பண்ணியிருக்கிற வீட்டுக்குள் பிரவேசிக்க அவர்கள் அழைக்கப்படுவார்கள். அங்கே அவர்கள் தோழர்களாக உலகத்தின் நிந்தைக்காரராவது, பொய்யராவது, விக்கிரகாராதனைக்காராவது, அசுத்தராவது, அவிசுவாசிகளாவது இருக்கமாட்டார்கள். சாத்தானை மேற்கொண்டவர்களே அவர்களோடிருப்பார்கள். திவ்விய கிருபையினாலே பூரணசற்குணங்கள் அவர்களுக்குண்டாகும். இங்கே அவர்களை வருத்துகிற ஒவ்வொரு பாவகுணமும், ஒவ்வொரு குறைவும் கிறிஸ்துவின் இரத்தத்தினால் விலக்கப்பட்டிருக்கிறது. அவருடைய மகிமைப்பிரகாசமும் மேன்மையும் சூரிய வெளிச்சத்தைப்பார்க்கிலும் மேலாக அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய குணாகுணங்களின் பரிபூரணமும் நீதியின் அழகும் அவர்கள் மூலமாகப் பிரகாசித்து இந்த வெளிப்படையான மகிமைக்கு மிஞ்சினவைகளாயிருக்கின்றன. அவர்கள் வெள்ளைச் சிங்காசனத்திற்குமுன் குற்றமற்றவர்களாயும் தேவதூதருடைய மகிமைக்கும் சிலாக்கியங்களுக்கும் பங்காளிகளாயுமிருக்கிறார்கள். SC 222.1
மனிதனுக்கிருக்கிற மகிமையான சுதந்தரத்தைப் பற்றிக் கவனிக்கையில் “மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்,” (மத் 16:26) அவன் மிகவும் ஏழையாக விருக்கலாம், என்றாலும் உலகம் அவனுக்கு ஒருபோதும் கொடுக்கக்கூடாத தனத்தையும் கனத்தையும் உடையவனாகிறான். அவனுடைய ஆத்துமா பாவத்திலிருந்து மீட்கப்பட்டும் கழுவப்பட்டுமிருக்கிறது. அதின் உத்தமமான தத்துவங்கள்யாவும் தேவனுடைய ஊழியத்திற்கென்று பிரதிஷ்டையாக்கப் பட்டிருக்கிறதும் மேலான பேறாயிருக்கிறது. மீட்கப்பட்ட ஒரே ஆத்துமாவினிமித்தம் பரலோகத்திலே தேவனுடைய சமூகத்திலும் பரிசுத்த தூதர்கள் முன்னிலையிலும் சந்தோஷமுண்டாகிறது. பரிசுத்த ஜெய கீதங்கள் இந்த மகிழ்ச்சியால் நிறைந்திருக்கின்றன. SC 222.2