கிறிஸ்துவைச் சேரும் வழி
THE SINNER’S NEED OF CHRIST
பாவிக்குக் கிறிஸ்து தேவை.
ஆதியிலே, தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த போது, அவன் சிறந்த சத்துவமும் திடச்சித்தமும் வாய்ந்தவனாயிருந்தான். தன்னுடைய தன்மையில் பூரணமும், தேவனோடு ஐக்கியமான நிலைமையிலுமிருந்தான். அவன் எண்ணங்கள் சுத்தமும், அவன் நோக்கங்கள் பரிசுத்தமுமாக விருந்தன. ஆயிலும், அவனுடைய கீழ்ப்படியாமையினாலே, அவன் சத்துவங்கள் தாறுமாறாயின அன்பின் சுபாவமற்றுப்போய் சுயநயம் அவனை ஆட்கொண்டது. மீறுதல்களினாலே அவனுடைய தத்துவங்கள் பலவீனமாகி, தன் சுயபலத்தைக் கொண்டு தீமைக்கு எதிர்த்து நிற்க அவனால் கூடாமற்போயிற்று. அதனால் சாத்தான் அவனைத் தனக்குச் சிறையாக்கிக்கொண்டான். விசேஷித்த பிரகரமாய் தேவன் இக்காரியத்தில் தலையிட்டிராவிட்டால், என்றென்றைக்கும் இந்த நிர்ப்பந்த நிலைமையிலே அவன் இருக்க நேரிட்டிருக்கும். மானிட சிருஷ்டிப்பையடுத்த தேவ ஒழுங்கைக் குலைத்துப் போட்டு, துக்கத்தினாலும் கேட்டினாலும் பூமியை நிரப்பவேண்டும் என்பதே சோதனைக்காரனுடைய முழுக்கருத்து. தேவன் மனிதனை உண்டாக்கினதின் பலனாக இந்தத் தீமையெல்லாம் வந்தன வென்று காட்டவுந் துணிவுகொள்வான். SC 17.1
பாவமில்லாத இந்த நிலைமையில், மனிதன் தேவனுடைய ஐக்கியத்தினாலுண்டான சந்தோஷத்தை அனுபவித்தான். “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது” கொலோ. 2 : 3. அவன் பாவத்தில் விழுந்தபோதோ, பரிசுத்தத்தின் சந்தோஷத்தைக் கண்டுபிடுக்கக்கூடாமற்போயிற்று. ஆகவே, தேவனுடைய சமூகத்திலிருந்து மறைந்துகொள்ளும் வழியைத்தேடினான். இன்னும் புதுப்பிக்கப்படாத இருதயத்தின் நிலைமையும் இப்படியே யிருக்கிறது. அது தேவனோடே ஐக்கியப்படவுமில்லை, அவ்வைக்கியத்தினாலுண்டாகுஞ் சந்தோஷத்தைக் கண்டுகொள்ளவுமில்லை. பாவியானவன் தேவசமுகத்திலே சந்தோஷமாய் இருக்க முடியாது. ஏனென்றால், பரிசுத்தருடைய ஐக்கியத்தினின்று நீங்கிக்கொள்ளவேண்டுமேன்கிற ஆசை அவனுக்குள் பலமாயிருக்கிறது பரலோகத்துக்குள் பிரவேசிக்க அவனுக்கு அநுமதி கிடைத்தாலும், அங்கே அவனுக்குச் சந்தோஷம் கடுகளவேனுமிராது. பரலோகத்தில் ஆளுகிற சுய நேசமில்லாத அன்பின் ஆவியும், ஒவ்வொரு ஆத்துமாவும் அளவற்ற அன்பு நிறைந்த இருதயமுள்ளவரோடு பொருந்தியிருப்பதும் அவனுடைய ஆத்து மாவுக்கு இசைவாயிராது. அவன் நினைவுகள், அவன் ஊக்கங்கள், அவன் நோக்கங்கள் யாவும் அவ்விடத்தில் தங்கள் பாவம் நீங்கி வாசம்பண்ணுகிறவர்களை நடத்துகிறவைகளுக்கு முற்றும் விகர்ப்பமாக விருக்கும். அவர்கள் வீண் கீதங்களைப் பாடுகிறபோது அவன் அவர்களோடு இசைந்துபாட ஏலாது, பரலோகம் அவனுக்கு வேதனையும் இம்ஸையுமுள்ளவிடமாகக்காணும். ஆதலால், அதன் வெளிச்சமாயும் சந்தோஷத்திற்குக் காரணருமாயிமிருக்கிறவருடைய சமுகத்தினின்று மறைந்துகொள்ளும்படி விரும்புவான். துன்மார்க்கரை பரலோகத்திலிருந்து தள்ளிவைப்பது தேவனுடைய கொடுமையான தீர்மானமல்ல. அவர்கள் அக்கூட்டத்தில் சேரக்கூடாத அபாத்திரத்தை தாங்களேயறிந்துகொண்டு விலகிப்போக விரும்புகிறார்கள். தேவனுடைய மகிமை அவர்களை எரித்துப்போடும், அக்கினியாக அவர்களுக்குத்தோன்றும். ஆகையால், அவர்கள் தங்கள் அழிவை வாஞ்சித்து, தங்களை இரட்சிக்கும்படி மரித்தவரான கிறிஸ்துவினுடைய திருமுகத்தினின்று மறைந்துகொள்ளப் பார்க்கிறர்கள். SC 18.1
நாம் அமிழ்ந்து கிடக்கிற பாவக்குழியினின்று நம்மை நாமே தப்பித்துக்கொள்வது கூடாதகாரியம். நம்முடைய இருதயம் தீமை நிறைந்தது. அவைகளை மாற்றுவதோ நமக்கரிது. “அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை” யோபு. 14 : 4. “எப்படிய்யென்றால், மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்படியக்கூடாமலும் இருக்கிறது” ரோ. 8 : 7. கல்வி, மனோவிர்த்தி, சித்தப்பிரயோகம், மனுஷீக முயற்சி இவைகளெல்லாவற்றிற்கும் அதனதன் ஸ்தானமுண்டு. இவ்விடத்தில் அவைகளுக்கு வல்லமையில்லை. இவைகள் யாவும் வெளியாச்சாரமாகிய நல்லொழுக்கத்தைப் பிறப்பித்தாலும், இருதயத்தையோ மாற்றுகிறதில்லை. ஜீவியத்தின் ஊற்றுக் கண்களையும் சுத்தமாக்காது. மனுஷர் பாவமான ஜீவியத்திலிருந்து பரிசுத்த ஜீவியத்துக்கு மாற்றப்படுவதற்கு முன்னே, உன்னதத்திலிருந்து வந்த ஓர் புதிய ஜீவியத்திற்கேற்ற வல்லமை அவர்கள் உள்ளத்திலிருந்துகொண்டு வல்லமையாய்க் கிரியை செய்யவேண்டும். அந்த வல்லமை இயேசுகிறிஸ்துதான். அவரது கிருபைமாத்திரம் ஆத்துமாவிலுள்ள ஜீவனில்லாத அந்தக்கரணங்களை உயிர்ப்பித்து, தேவனிடத்திலுள்ள பரிசுத்தத்திற்கு இழுக்கக்கூடும். “ஒருவன் உயரதிலிருந்து பிறந்தாலொழிய,” அதாவது, புது ஜீவியத்துக்கு நடத்தும் புது இருதயத்தையும், புது ஆசையையும், புது எண்ணத்தையும், புது நோக்கத்தையும் அடைந்தாலன்றி, “தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்.” யோ. 3 : 3 என்று இயேசு ஒரு காலத்தில் சொல்லியிருக்கிறார். மனிதனிடத்திலிருக்கிற நன்மையை விருந்தி செய்வது அவனிடத்திலிருந்து இயல்பான சுபாவம்தான் என்னும் எண்ணம் முற்றும் மோசகரமான கிருத்திரமமேயொழிய வேறல்ல: “ஜென்ம சுபாவமான மனுஷனே தேவனுடைய ஆவிக்குரியவைகளை யேற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத்தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால் அவைகளை அறியவுமாட்டான்” 1 கொரி. 2 : 14. “நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து அதிசயப்படவேண்டாம்” யோ. 3 : 7. “அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது” என்றும், “நாம் இரட்சிக்கப்படும்படிக்குவானத்தின் கீழெங்கும், மனுஷருக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவுமில்லை” அப். 4:12 என்றும், இயேசுகிறிஸ்துவைப்பற்றி வேதாகமத்தில் வாசிக்கிறோம். SC 19.1
தேவனுடைய அன்பின் நேசத்தையும், கருணையையும், அவருடைய இலட்சணங்களிலொன்றாகிய தகப்பனடைவான இரக்க உருக்கத்தையும் கிரகித்துக்கொள்வதாவது, அவருடைய நியாயப்பிரமாணத்தின் ஞானத்தையும் நீதியையுமறிந்து கொள்வதாவது, அது நித்திய அன்பின் ஆதாரத்தின்பேரில் நாட்டப்ப்ட்டிருக்கிறதென்று அறிந்து கொள்வதாவது போதாது. “நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேன்” ரோ. 7 : 16 என்றும், “நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான்; கற்பனையும் பரிசுத்தமாயும், நீதியாயும், நன்மையாயும் இருக்கிறது” ரோ. 7 : 12 என்றும், பவுல் அப்போஸ்தலன் சொன்னபோது, இவைகள் எல்லாவற்றையும் துலாம்பரமாய்க் கண்டுகொண்டிருந்தான். மேலும், அவன் “நானே பாவத்துக்குக் கீழாகவிற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்” ரோ. 7 :14 என்று மன வேதனையினால் கசந்து, நம்பிக்கையற்றவனாயிலிருந்து திகைக்கிறபோது சொல்லுகிறான். பரிசுத்தத்தையும் நீதியையும் அடைய வேண்டுமென்கிற வாஞ்சையும், சக்தியும் தன்னிடத்திலில்லையே என்று உணர்ந்து ஏங்கி, “நிர்ப்பந்தமான மனுஷன் நான், இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்” ரோ. 7 : 24 என்று அங்கலாய்க்கிறான். பாவபாரஞ்சுமந்து, இளைத்துக்களைத்துப்போன இருதயங்களினின்று இவ்வித துக்க புலம்பல் சகல தேசங்களிலும் எக்காலங்களிலும் எழும்பியிருக்கின்றன. இவை யாவற்றிற்கும் தகுந்த உத்தரவு ஒன்றுண்டு. அதாவது, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி” யோ. 1 : 29 என்பதே. SC 21.1
இந்தச் சத்தியத்தை திருஷ்டாந்தப்படுத்துவதற்கென்றும், பாவபாரத்தினின்று விடுதலையடைய வாஞ்சிக்கிற ஆத்துமாக்களுக்குத் தெளிவாகக் காட்டுவதற்கென்றும், தேவாவியானவர் தேடிவைத்திருக்கிற அத்தாக்ஷிகள் பலவுண்டு. யாக்கோபு என்னும் எத்தன் ஏசாவை வஞ்சித்தபின், தன் தகப்பன் வீட்டிலிருந்து ஓடிபோகிறபோது, அவனுடைய பாவப் பாரம் அவனைக் கீழே அமுக்கினது. தன் ஜீவியத்தைச் சம்பிரமமாக்கின எல்லாவற்றையும் விட்டுப் பிரிந்து, ஒண்டியாய் அவாந்தா வெளியிலே தள்ளப்பட்டிருக்கையில், எல்லாவற்றிற்கும் மேலாக அவன் ஆத்துமாவை பளுவாக்கின ஒரே ஒரு யோசனை என்னவென்றால், தன் பாவம் தன்னைத் தேவனினின்று தறித்துப்போட்டது; வானவரும் தன்னை முழுவதுங் கைவிட்டுவிட்டார் என்கிற பயந்தான் அவனை ஆட்கொண்டது. வெறுந்தரையிலே படுத்துக் கிடக்கிறான். அவனைச் சூழ தனித்து நின்ற குன்றுகளும், மேலே வானத்தில் ஜோதியாய்ப் பிரகாசித்த நக்ஷத்திரங்களுமாத்திர மிருந்தன. அவன் நித்திரை போகையில், ஒரு விநோத வெளிச்சத்தை சொப்பனத்தில் காண்கிறான். இதோ அவன் படுத்துக் கொண்டிருந்த மைதானத்திலிருந்து நிழலடர்ந்த ஏராளமான படிகளுள்ள ஒரு ஏணி வானத்தின் வாசல் வரை எட்டியிருந்த்தாகவும், அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாயிருந்ததாகவுங் கண்டான். அத்தருணத்தில், அதற்குமேலே நின்றுகொண்டிருந்த கர்த்திரிடத்திலிருந்து ஆறுதலும் நம்பிக்கையும் நிறைந்த ஓர் திவ்விய சத்தம் அவன் காதில் தொனித்தது. இவ்விதமாக, அவன் ஆத்துமா வாஞ்சித்ததும், அதற்கு இன்றியமையாத்துமான ஓர் இரட்சகன் யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டார். பாவியாகிய அவன் அதின் மூலமாய்த் தேவனோடு ஐக்கியமாகும் ஒரு வழி வெளிப்படுத்தப்பட்ட்தைச் அந்தோஷத்தோடும் நன்றியறிதலோடுங் கண்டுகொண்டான். அவன் சொப்பனத்தில் கண்ட இந்த ஆச்சரியமான ஏணி தேவனுக்கும் மனிதனுக்கும் சம் பந்தமாயும், ஒரே மத்தியஸ்தமாயுமிருக்கிற இயேசுவையே குறித்து காட்டிற்று. SC 23.1
கிறிஸ்து நாத்தான்வேலோடு செய்த சம்பாஷணையில் “வானந்திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையுங் காண்பீர்கள்” யோ. 1 : 51 என்று சொன்னபோது காட்டிய ஒப்பனை இதுதான். சமயநிலை தவறினபோது அதாவது, பாவம் உற்பத்தியான காலத்தில் மனிதன் தேவனுக்குத்தன்னை அந்நியnaaனாக்கிக்கொண்டான். பூமியும் வானத்தினின்று வெட்டுண்டு போயிற்று. இந்த அகன்ற பெரும் பிளப்பைக் கடக்கக்கூடிய எத்தனங்களுமிருந்ததில்லை. ஆனால் கிறிஸ்துவின் மூலமாய்த் திரும்பவும் இப்பூமி வானத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. பணிவிடையாட்களாகிய தூதர்கள் மனிதரிடத்தில் வந்து, கலந்து பேசத்தக்கதாக பாவத்தினுலுண்டான பிளப்பாகிய குடாக்கடலிலே, கிறிஸ்து தமது சொந்தப் புண்ணியத்தினால் ஒரு வாராவதியைக்கட்டி முடித்திருக்கிறார். அவர் பலவீனனும் திக்கற்றவனுமான விழுந்துபோன மனிதனை மட்டற்ற சர்வ வல்லபம் பொருந்திய கர்த்தாவோடு கூட்டிச்சேர்க்கிறார். SC 25.1
விழுந்துபோன ஜாதியாருக்கு நம்பிக்கையும், ஆதரவுமாயிருக்கிற ஒரே நாதனை அசட்டை செய்தால், மனித தன்மையை உயர்த்துவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளெல்லாம் அபத்தமாய்ப்போகும். அவைகளின் தேர்ச்சியைக் குறித்து மனிதர் காணும் கனாக்களும் வீணாக முடியும். ஏனென்றால், “நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகிறது.” யாக். 1 : 17. ஆதலால் அவரையன்றி நமக்கு மேன்மை பொருந்திய குணம் அமையாது. தேவனிடத்தில் சேருவதற்கிருக்கும் ஒரே வழி கிறிஸ்துதான். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்: என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில்வரான்” (யோ. 14. 6) என்று வசனத்திருக்கிறார். SC 26.1
மரணத்தைப்பார்க்கிலும் வலுவாயிருக்கிற அன்பினாலே தம்முடைய பூலோக மக்கள் பேரில் பரிதாபச் சிந்தையும் ஆவலுமுடையவராயிருக்கிறார். அவர் தமது குமாரனை பூலோகத்தாருக்குக் கொடுத்ததினால் வானலோகம் முழுவதையும் ஒரே ஈவாக அருளிச் செய்திருக்கிறார். மனிதனுடைய மீட்பின் பொருட்டு மீட்பரின் ஜீவியம், மரணம், மத்தியஸ்தம், தேவதூதருடைய பணிவிடை, ஆவியானவருடைய பரிந்துபேசுதல், எல்லாவற்றிற்குமேலாய்ப் பிதாவானவருடைய ஊழியம், வானோர்கலுடைய குன்று முயற்சிகளுமாகிய இவை யாவும் தீர்க்கமாய்ப் பதிவாயிருக்கிறதைப் பார்க்கிறோம். SC 26.2
இதோ, நமக்காகச் செலுத்தப்பட்டிருக்கிற அதிசய பலியைத் தியானிப்போமாக. காணுமற்போனவைகளைத் தேடவும், பிதாவின் வீட்டில் மறுபடியும் அவைகளை கொண்டுவந்து சேர்க்கவும், தேவாதி தேவன் செய்திருக்கிற கிரியையையும், முயற்சியையும் நன்குமதிப்போமாக. பலமிகுந்த நோக்கங்க்ளையும், வல்லமையுள்ள கர்த்தத்துவங்களையும் ஒன்றுய் விசாரித்தறிவது கூடாமை: நியாயமானவைகளைச் செய்வதாலுண்டாகு மிகுந்த பலன், பரலோக பாக்கியத்தை யனுபவத்தல், தேவதூதர்களுடைய கூட்டுறவு, தேவகுமாரனுடைய அன்பு, அந்நியோன்னிய ஐக்கியம், என்றென்றைக்குமுள்ள நம்முடைய சத்துவங்களின் உயர்வும் விஸ்தீரணமுமாகிய இந்த எல்லா வல்லமையுள்ள தூண்டுதல்கள் நம்முடைய சிருஷ்டிகரையும் மீட்பரையும் முழு இருதயத்தோடே சேவிக்கும்படி நம்மை ஏவிவிடுகிறவைகளாயிருக்கின்றனவல்லவா? SC 27.1
மேலும், இன்னோர் பக்கத்தில் பாவத்துக்கு விரோதமாய் நிற்கும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு, விலக்கவொண்ணா பிரதிபலன், நம்முடைய குணாதிசயங்களின் பங்கம், கடைசி அழிவு இவையாவும் சாத்தானைச் சேவிப்பதினால் வந்து லபிக்கும் என்று கர்த்தருடைய வசனம் எச்சரிக்கின்றது. SC 27.2
தேவ இரக்கத்தை அவமதியாதிருப்போமாக. அவர் இன்னும் நமக்கு என்னதான் செய்யக்கூடும். இவ்வளவு ஆச்சரிய அன்பினாலே நம்மிடத்தில் நேசம் வைத்த அவருக்குகந்தவர்களாய் நடந்துகொள்வோமாக. நாம் அவருடைய திவ்ய சாயலை அணிந்து கொள்வதற்கும், பணிவிடைசெய்யும் தூதருடைய அந்நியோந்நியத்தை அடைந்துகொள்வதற்கும், பிதாவோடும் குமரானோடும் ஐக்கியப்பட்டு இசைந்திருப்பதற்கும், நமக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறவைகளை நமக்கென்று பயன்படுத்திக்கொள்வோமாக. SC 27.3
தேவன் மனிதர்பேரில் வைத்திருக்கிற அன்பைக் காட்டுகிற வேத வசனங்கள். SC 28.1
தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோ. 3: 16. SC 28.2
அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்தகாலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நகக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்னுகிறார். ரோ. 5: 6, 8. SC 28.3
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். ஏசா. 53: 5. 6. SC 28.4
அவர் மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையிலே விழுந்தது. லூக். 22: 44. SC 29.1
ஒன்பதாம் மணிநேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். மத். 27: 46. SC 29.2
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். கலா. 3: 13. SC 29.3