கிறிஸ்துவைச் சேரும் வழி
FAITH AND ACCEPTANCE
விசுவாசமும் அங்கிகாரமும்.
உன்னுடைய உள்ளிந்திரியமானது பரிசுத்த ஆவியால் உயிரடைந்திருக்கையில் பாவத்தின் ஆபாசம், அதின் வல்லமை, கேடு, சாபம் முதலியவை எப்படிப்பட்ட தென்பதைப்பற்றி நீ பார்த்திருக்கிறாrAAய். பார்த்து அதின்மேல் வெறுப்புக்கொண்டிருக்கிrAAறாய். பாவமானது உன்னைத் தேவனிடத்திலிருந்து பிரித்திவிட்டதென்றும், கேட்டின் வல்லமைக்கு நீ அடிமையானயென்றும் உணறுகிறாய். எவ்வளவாகத் தப்பித்துக்கொள்ளப் பிரயாசப்படுகிறயோ அவ்வளவாக நீ சக்தியற்றவன் என்பதை உன் அனுபவத்தில் காண்கிறாய். உன்னுடைய நோக்கங்கள் பரிசுத்தமில்லாத்தும் உன்னுடைய இருதயம் அழுக்கடைந்ததுமாக இருக்கிறது. உன் ஜீவியமானது தன்னயத்தினாலும் பாவத்தினாலும் நிறைந்திருக்கிறதாகக் காண்கிறாய். பாவமன்னிப்படைய வேண்டும், பரிசுத்தமாகவேண்டும், சுயாதீனமாக வேண்டுமென்றும் விரும்புகிறாய். தேவனேடு ஐக்கியமாவது அவரைப்போலிருப்பதுமாகிய இவற்றை நீ அடையும்படி என்ன செய்யக்கூடும்? SC 83.1
உனக்குத் தேவையானது சமாதானந்தான்: அதாவது ஆத்துமாவில் தேவன் அளிக்கும் மன்னிப்பு, சமாதானம், அன்பு ஆகிய இவை உனக்கு அவசியமானது. பணத்தால் அதை வாங்கமுடியாது, புத்தியினால் அதைச் சம்பாதிக்க மாளாது, ஞானத்தால் அதை அடையவும் ஏலாது; உன்னுடைய சுயமுயற்சியால் அதைக் கைப்பற்றிக் கொள்ளலாமென்று நீ நம்புவதும் விருதா ஏசா 55:1-ல் கண்டிருக்கிறபடி “பணமுமின்றி விலையுமின்றி” ஒரு ஈவாகத் தேவன் அதை உனக்குக் கொடுக்கிறார். கரத்தைநீட்டி அதைப்பற்றிக்கொண்டால் அது உன்னுடையதாகும். “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்” ஏசா. 1:18 என்றும், “உங்களுக்கு நவமான இருதயத்தைக்கொடுத்து; உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிடுவேன்” எசேக. 36:26 என்றும் கர்த்தர் திருவுளம் பற்றுகிறார். SC 84.1
நீ உன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டாயிற்று. ஆகையால் அவற்றை உன் இருதயத்திலிருந்து நீக்கிவிடுவாயாக. உன்னைத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்படி தீர்மானித்திருக்கிறாயே. இப்பொழுதே அவரண்டைபோய் உன் பாவங்களைக் கழுவி, உனக்கு நவமான இருதயத்தைக் கொடுக்கும்படி அவரைக் கேள். இப்படி நீ அவரைக் கேட்கும் பொழுது, அவர் முன்னமே வாக்குத்தத்தம் செய்திருக்கிறபடியால், அதை நிறைவேற்றுகிறர் என்று நம்பு. இயேசுவானவர் பூலோகத்தில் இருந்த காலத்தில் கற்பித்த பாடம் என்னவெனில், தேவன் நமக்கு வாக்களித்திருக்கிற ஈவை நாம் பெற்றுக்கொள்ளுகிறேம் என்றும், அந்த ஈவு நம்முடைய தாகிவிட்டதென்றும் நாம் நம்பவேண்டும் என்பதேயாம். வியாதிகளைச் செளக்கியப்படுத்தக்கூடிய வல்லமை இயேசுவினிடத்தில் இருந்தது என்பதாக ஜனங்கள் விசுவாசித்தபொழுது மாத்திரம் அவர் அவர்களது பிணிகளை சொஸ்தப்படுத்தினார். நாளடைவிலே அவர்கள் காணக்கூடிய விஷயங்களில் அவர்களுக்கு அவர் சகாயஞ்செய்து, அவர்கள் காணக்கூடாத விஷயங்களைப்பற்றித் தம் மேல் பூரணநிச்சயம் கொள்ளத்தக்கதாக உற்சாகப்படுத்தினார். அதாவது பாவங்களை மன்னிக்கத் தமக்கு அதிகாரம் உண்டென்று அவர்கள் விசுவாசிக்கத்தக்கதாக வழி காட்டினார். திமிர்வாதக்காரன் ஒருவனை அவர் குணமாக்கினபொழுது, “பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷ குமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப்போ என்றார்” மத். 9:6-ம் வசனத்தில், தான் பாவத்தை மன்னிக்கக் கூடும் என்பதாக வெகு தெளிவாகச் சொல்லியிருக்கிறார். யோவான் சுவிசேஷகன் கிறிஸ்துவினுடைய அற்புதங்களைப்பற்றிப் பேசும் பொழுது “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து அன்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” யோவா. 20:31 என்று சொல்லுகிறார். SC 84.2
இயேசுவானவர் பிணியாளிகளைச் சுகப்படுத்தின விதத்தை நாம் வேதத்திலே சுலபமான நடையில் படிக்கும் பொழுதெல்லாம், பாவ மன்னிப்படைவதற்காக் அவரை நாம் நம்பி விசுவாசிப்பது அவ்விதம் என்று கற்றுக்கொள்ளலாம். பெதஸ்தாவில் குணமான வியாதியஸ்தன் சரித்திரத்தைக் கவனிப்போம். அந்த ஏழைநோயாளி உதவியற்றவனாயிருந்தான். முப்பத்தெட்டு வருஷங்களாகத் தன் கால்களை உபயோகிக்க இயலாதவனாயிருந்தான். ஆயினும் இயேசு அவனை நோக்கி, “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட” யோவா. 5:8 என்று கட்டளை கொடுத்தபொழுது, அவன், ஆண்டவரே, என்னைக் குணமாக்க உம்மால் ஆகுமானால் உம்முடைய வார்த்தைக்குக் கீழ்படிவேன் என்று சொல்லியிருக்கலாமே. ஆனலோ, கிறிஸ்துவின் வார்த்தையை நம்பி, தான் சொஸ்தமாகிவிட்டதாக அவன் விசுவாசித்து, உடனே நடக்கும்படி எத்தனித்தான். நடக்கச்சித்தங்கொண்டதும், உடனே நடந்தான். கிறிஸ்து வின் வார்த்தையை நம்பி முயற்சித்ததினால், தேவன் பலம் அளித்தார்; அவன் சொஸ்தமானான். SC 86.1
அவ்வாறே நீ ஒருபாவி. முன்னேசெய்த பாவங்களுக்காகப் பிராயச்சித்தம்பண்ண உன்னால் முடியாது. உனது இருதயத்தைமாற்றி, உன்னை நீயே பரிசுத்தப படுத்திக்கொள்ளவும் உன்னாலாகாது. கிறிஸ்துவின் மூலமாய் உனக்கு எல்லாவற்றையும் செய்வதாக தேவன் வாக்களிக்கிறார். நீ அந்த வாக்குத்தத்தத்தை விசுவாசிக்கிறாய். உன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு, உன்னைத் தேவனுக்கு ஒப்புவித்து விடுகிறய். அவருக்கு ஊழியஞ்செய்யவும் சித்தங்கொள்ளுகிறாய் இவற்றை யெல்லாம் எவ்வளவு நிச்சயமாக நீ செய்கிறாயோ அவ்வளவு நிச்சயமாகத் தேவன் உனக்களித்திருக்கிற வாக்கை நிறைவேற்றுவார். நீ பாவமன்னிப்படைந்து, கழுவப்பட்டிருக்கிறாயென்ற வாக்கை நீ நம்புவாயானல், இதர காரியங்கள் தேவனைப் பொறுத்ததாகும். தான் குணமானதாக அந்த வியாதியஸ்தன் நம்பினபொழுது நடந்து போகும்படி கிறிஸ்துவானவர் அவனுக்கு அவ்வாறே அவர் உன்னையும் குணமாக்குவார். நீ விசுவாசித்தால் அப்படியே ஆகும். SC 87.1
சுகம் உனக்குக் கிடைத்திருக்கிறதென்று உணரும் வரைக்கும் காத்திராதே. நம்புகிறேன், சொஸ்தமானதாக நான் அறிகிறதினாலல்ல, தேவன் வாக்களித்திருப்பதால் எனக்குச் சுகம் கிடைத்திருக்கிறது என்று சொல். SC 87.2
“நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்” மாற்கு 11:24 என்று இயேசு சொல்லுகிறார். இந்த வாக்குத் தத்தத்திற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. அது என்ன வென்றால், தேவனுடைய சித்தத்திற்கேற்ப நாம் ஜெபிக்கவேண்டுமென்பதே. நம்மை பாவத்தினின்று சுத்திகரித்து, நம்மை அவருடைய பிள்ளைகளாக்கி, நாம் பரிசுத்த ஜீவியம் செய்யும்படி நமக்கு வல்லமை கொடுப்பதற்காகத் தேவன் விருப்பம்முள்ளவராயிருக்கிறார். ஆகையால் இந்த ஆசீர்வாதங்களுக்காக அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுவதுடன், அதே ஆசீர்வாதங்களை நாம் அடைகிறோம் என்று நம்பி, அவற்றை அடைந்தாயிற்று என்று தேவனுக்கு நன்றி செலுத்தலாம். நாம் இயேசுவண்டை சென்று சுத்தமாவதும், நியாயப்பிரமாணத்தோடு நம்முடைய ஜீவியத்தை ஒத்துப் பார்க்கும்பொழுது, வெட்கம் துக்கமில்லாமல் நிற்கத்திராணியுள்ளவர்களாவதும் நமது சிலாக்கியம். “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பிள்ளை.” ரோமர் 8:1. SC 88.1
இதுமுதல் நீ உனக்குச் சொந்தமானவனல்ல: கிரயத்துக்கு வாங்கப்பட்டிருக்கிறாய். “அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள்” என்று 1 பேதுரு 1:18, 19-ல் கண்டிருக்கிறது. நீ தேவனை ஒரேயடியாக நம்பும்பொழுது, பரிசுத்த ஆவியானவர் உன் இருதயத்தில் புது ஜீவியத்தைப் பிறப்பிக்கிறார். இப்பொழுது நீ தேவனுடைய குடும்பத்தில் பிறந்த பிள்ளையாயிருக்கிறதினால், அவர் தமது குமாரனை நேசிக்கிறதுபோல உன்னையும் நேசிக்கிறார். SC 89.1
உன்னை இயேசுவுக்கு ஒப்புவித்திருக்கிறபடியால் பின் வாங்காதே. உன்னை அவரிடத்திலிருந்து பிரித்துவிடாதே. நான் கிறிஸ்துவுக்குரியவன், அவருக்கே என்னை ஒப்புக் கொடுத்துருக்கிறேன் என்று ஒவ்வொருநாளும் சொல்லு. அவர் தமது ஆவியை உனக்குத்தந்து, தமது கிருபையால் உன்னைக் காத்துக்கொள்ளும்படியாக அவரைக்கேள். தேவனுக்கே உன்னை ஒப்புவித்து அவரை விசுவாசிப்பதினால் நீ அவருடைய பிள்ளையாகிறதுபோலவே, அவரிலே ஜீவிக்கவும் வேண்டும். “நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் ...... நடந்துகொள்ளுங்கள்” கொலோ. 2:6 என்று அப்போஸ்தலன் சொல்லுகிறார். SC 90.1
சிலர் தாங்கள் முதலாவது பரிட்சை வகுப்பில் இருக்கவேண்டுமென்றும், அவருடைய ஆசிர்வாதங்களைத் தங்களுடையதாக உரிமை பாராட்டுமுன்னே தாங்கள் சீரடைந்திருக்கிறதாகக் கர்த்தருக்குக் காட்டவேண்டுமென்றும், நினைக்கிறார்கள். ஆனால் இப்பொழுதும் அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைத் தங்களுடையதென்று சொல்லலாம். அவர்களுடைய பலவீனங்களில் சகாயஞ்செய்வதற்காகக் கிறிஸ்துவின் கிருபையும் ஆவியும் அவசியம், இல்லாவிட்டால் அவர்கள் பாவத்தை எதிர்க்கமுடியாது. நாம் இருக்கிறபடியே, அதாவது பாவமுள்ளவர்களாகவும், இயேசுவின்பேரில் சார்ந்தவர்களாகவும் தம்மிடத்தில் வரவேண் டுமென்று அவர் விரும்புகிறார். நாம் நம்முடைய பலவீனம், பேதமை, பாவமாகிய இவையெல்லாவற்றோடும்போய், அவருடைய பாதத்தில் பச்சாதாபத்துடனே விழலாம். அவர் தமது அன்பின் கரங்களால் நம்மை அணைத்து, நமது காயங்களைக் கட்டி, எல்லா அசுத்தத்தினின்றும் நம்மைச் சுத்திகரிப்பது அவருக்கு மகிமையான காரியமாம். SC 90.2
இதிலே ஆயிரக்கணக்கானவர்கள் தவறிப்போகிறார்கள். இயேசுவானவர் அவர்களைப் பேர்பேராகவும் தனித்தனியாகவும் மன்னிக்கிறார் என்று அவர்கள் நம்புகிறதில்லை; தேவனுடைய வாக்குத் தத்தத்தின் பூரணத்தை கிரகிக்கிறதுமில்லை. ஆண்டவருடைய கற்பனைகளுக்குக் கீழ்படிகிறவர்கள் யார் யாரோ அவர்களெல்லாம் தங்களுடைய ஒவ்வொரு பாவத்துக்கும் தாராளமான மன்னிப்புண்டென்று வெகு எளிதாக அறிந்து கொள்ளக்கூடிய சிலாக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள். தேவனுடைய ஆசீர்வாதங்கள் உனக்குரியதல்ல என்ற அவநம்பிக்கையை அகற்று. அவை மனந்திரும்புகிற ஒவ்வொரு பாவிக்கும் சொந்தம். கிறிஸ்துவானவர் நமக்காகப் பலனையும் கிருபையையும் சேகரித்து வைத்திருக்கிறார் ஊழியஞ் செய்கிற தேவதூதர்கள் விசுவாசிக்கிற ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் இவற்றைக்கொண்டுவந்து கொடுக்கிறார்கள். தங்களுக்காக மரித்த இயேசுவிடத்தில் பலம், பரிசுத்தம், நீதி ஆகிய இவற்றைக் கண்டு கொள்ளக்கூடாத அளவு பாவமுள்ளவர்கள் இவ்வுலகில் ஒருவரும் இல்லை. பாவக்கரையும் தீட்டுமுள்ள அங்கிகளை அவர்களினின்று கழற்றி, நீதியென்னும் வெண்வஸ்திரத்தை அவர்களுக்கு உடுத்தும்படி அவர் காத்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் மரிக்கும்படியல்ல, பிழைக்கும்படிக்கே கற்பிக்கிறார். SC 91.1
அநித்தியமான மனுஷர் ஒருவரோடொருவர் நடந்து கொள்ளுகிறது போல தேவன் நம்மோடு நடந்து கொள்ளுகிறதில்லை. அவருடைய எண்ணங்களெல்ளாம் இரக்கமும் அன்பும் மிகுந்த உருக்கமும் பொருந்தியவைகள். “துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.” எ.சா. 55 : 7 என்றும் “உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன்பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன்.” எ.சா. 44 : 22 என்றும் தேவன் சொல்லுகிறார். SC 92.1
“மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.” SC 93.1
எசேக். 18:32 சாத்தானானவன் நம்முடைய மனதைத்திருப்பி, தேவனுடைய சிறந்த வாக்குகளை நாம் மறந்துபோகும்படியாக என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் செய்யச் சித்தமாயிருந்து, ஆத்துமாவிலிருந்து, நம்பிக்கையையும் ஒளியையும் எடுத்தெறிய விரும்புகிறான். ஆதலால் அவனை அவ்வாறு செய்யவிடாதே. சோதனைக்காரனுக்குச் செவிகொடாமல், பின்வருமாறு சொல்லு :- நான் பிழைக்கும்படி இயேசு மரித்தார். அவர் என்னை நேசித்து, நான் அழிந்துபோகாதபடி பார்க்கிறார். உருக்கம் நிறைந்த பரமபிதா எனக்குண்டு; அவருடைய அன்பை நான் பழித்தபோதிலும், அவர் எனக்கு அளித்திருக்கிற நன்மைகளை வீணாக்கினபோதிலும், “நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்.” “அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக்கொண்டு மனதுருகி, ஒடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.” லூக்கா 15:18-20. இந்த உவமையில் கெட்டுப்போன ஒருவன் எவ்விதமாகத் திரும்ப ஏற்றுக்கொள்ளப்படுவான் என்று சொல்லியிருக்கிறதல்லவா? SC 93.2
இந்த உவமைதானும் மனதை இளகச்செய்யக்கூடியதாகத் தோன்றினபோதிலும், பரம பிதாவின் மட்டற்ற உருக்கத்தை விவரித்துச்சொல்ல இயலாமற்போயிற்று. “அநாதி சினேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” எரே. 31:3 என்று கர்த்தர் தமது தீர்க்கதரிசியின் மூலமாமய் உரைக்கிறார். பாவியானவன் பிதாவின் வீட்டைவிட்டுத் தூரமான அன்னிய நாட்டிலே தனது பொருளையெல்லாம் வீணே செலவ்அழித்துக் கொண்டிருக்கும்பொழுது, பிதா வுடைய இருதயம் அவனை வாஞ்சிக்கிறது. தேவனுடைய ஆவி அவனை உருக்கமாக ஏவ ஏவ, அவனுடைய ஆத்துமாவிலே அவரண்டை சேரவெண்டுமென்ற ஆசை எழும்புகிறது. இந்த ஆவியானவர் அவன் அன்பு நிறைந்த தன் தந்தையிடம் திரும்பும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டிருக்கிறார். SC 94.1
வேதத்தில் வரையப்பட்டிருக்கிற விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்கள் உனக்கு முன்னே இருக்கும்பொழுது நீ சந்தேகத்துக்கு இடங்கொடுக்கலாமா? ஏழைப் பாவியானவன் தன் பாவங்களைக் களைந்து, பிதாவண்டை திரும்பும்படி விரும்பும்பொழுதும், மனந்திரும்பினவனாகத் தமது பாதத்தருகே வரும்பொழுதும், கர்த்தர் இரக்கமில்லாமல் அவனைத் தடுக்கிறார் என்று நீ நம்பலாமா? அப்படிப்பட்ட எண்ணங்களை அகற்றிவிடு! நமது பரம பிதாவைப்பற்றி இப்படிப்பட்ட எண்ணங்கொள்ளுவதைப் பார்க்கிலும் உன் ஆத்துமாவுக்குக் கேடு விளைவிப்பது வேறொன்றுமில்லை. அவர் பாவத்தை வெறுத்துப் பாவியை நேசிக்கிறார். யார் யார் விரும்புகிறார்களோ அவர்களெல்லோரும் இரட்சிப்படைந்து மகிமையான இராச்சியத்தில் நித் தியபாக்கியத்தை அடையும் பொருட்டு, அவர் கிறிஸ்துவிலே தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். தேவன் நமதுபேரில் வைத்த அன்பைத் தெரிவிக்கும்படி அவர் தெரிந்தெடுத்திருக்கிற வார்த்தைகளைக் கவனித்துப்பார். இதைவிடச் சாரமுள்ளதும் உருக்கமானதுமான பாஷைநடை வேறெதற்காவது உபயோகப்பட்டிருக்கிறதா? “ஸ்திரீயானவள் தன்கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை.” ஏ சா 49:15. SC 95.1
சந்தேகப்பட்டு நடுங்குகிறவனே, நோக்கிப்பார். இயேசு நமக்காகத் தந்தருளினதற்காக அவருக்கு நன்றி செலுத்து. அவர் உனக்காக மரித்தது விருதாவாகப்போகாதபடி மன்றாடு. அவையானவர் இன்று உன்னை அழைக்கிறார். முழு இருதயத்தோடு இயேசுவண்டை வா, அவருடைய ஆசிர்வாதங்களெல்லாம் உனக்குச் சொந்தமானவைகளென்று நீ உரிமை பாராட்டலாம். SC 96.1
அந்த வாக்குத்தத்தங்களை வாசிக்கும்பொழுது அவையெல்லாம் வரையறுத்துச் சொல்ல முடியாத அன்பையும் இரக்கத்தையும் காட்டுகிறதென்பதை நினைத்துக்கொள். ஆதியந்தமில்லாத அன்பின் சொருபமாகிய தேவன் மட்டற்ற இரக்கத்தையும் காட்டுகிறதென்பதை நினைத்துக்கொள். ஆதியந்தமில்லாத அன்பின் சொருபமாகிய தேவன் மட்டற்ற இரக்கத்தோடே பாவியின் பக்கமாக நெருங்குகிறார். “இவருடைய இரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண் டாயிருக்கிறது.” எபேசி 1:7. ஆம், மெய்யாகவே தேவன் உன்னுடைய சகாயர் என்று நம்பு. தேவன் தமது பரிசுத்த சாயலை மனுஷரில் புதுப்பிக்க விரும்புகிறார். பாவ அறிக்கையோடும் மனந்திரும்புதலோடும் நீ அவரண்டை போவாயானால், அவர் இரக்கத்தோடும் பாவமன்னிப்போடும் உன்னண்டை வருவார். SC 96.2