கிறிஸ்துவைச் சேரும் வழி

7/17

CONFESSION.

பாவ அறிக்கை.

“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்: அவைகளை அறிக்கைசெய்து விட்டு விடுகிறவனே இரக்கம் பெறுவான்” நீதி. 28:13. SC 62.1

நாம் தேவனுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கிருக்கிற நிபந்தனைகள் அறிந்துகொள்வதற்கு வெகு சுலபமும், நீதியும் நியாயமுமானவைகளாயிருக்கின்றன. பாவமன்னிப்பையடைந்து கொள்ளும் பொருட்டு நாம் கஷ்டமுள்ள கொடூரமான ஆண்டவர் விரும்புகிறதில்லை. நம்முடைய ஆத்துமாவை கர்த்தரிடத்தில் ஒப்படைப்பதற்கும், நம்முடைய மீறுதல்களை நிவிர்த்தி செய்துகொள்வதற்கும் நீண்ட அலுப்பான யாத்திரை செய்யவாவது, கொடிய தவங்களை பண்ணவாவது அவசியமில்லை. ஆனால் பாவங்களை அறிக்கைசெய்துவிட்டு விடுகிறவனே இரக்கம் பெறுவான். SC 62.2

“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒரு வருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்” யாக். 5: 16 என்று அப்போஸ்தலன் சொல்லுகிறார். உங்கள் பாவங்களை மன்னிக்கக்கூடியவராகிய தேவனுக்கும், உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவருக்கும் அறிக்கையிடுங்கள். உங்கள் சிநேகிதருக்காவது அயலாருக்காவது விசனமுண்டாக்கி யிருப்பீர்களாகில், உங்கள் குற்றங்களை நீங்கள் ஒத்துக்கொள்ளும்போது உங்களுக்கு மனதார மன்னிப்புக் கொடுப்பது அவர்கள் கடமை. நீங்கள் மனவருத்தப்படுத்தின உங்கள் சகோதரன் தேவனுடைய ஆஸ்தியாயிருப்பதினாலும், அவனுக்கு வருத்தத்தையுண்டாக்கினதினால் அவனுடைய சிருஷ்டிகளும் மீட்பருமாகிய தேவனுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருக்கிறதினாலும், தேவனிடத்தில் பாவமன்னிப்பைத் தேடவேண்டியவர்களாயிருக்கிறீர்கள். “எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிறவரும், நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடியவரும்,” எபி. 4: 15 நம்முடைய பாவக்கறை ஒவ்வொன்றையும் கழுவக் கூடியவருமாயிரிக்கிற மகா பிரதான ஆசாரியராகிய ஒரேமத்தியஸ்தர் முன்னிலையிலே இந்தக்குற்றம் நிறுத்தப்படுகிறது. SC 62.3

தங்கள் பாவங்களை உணர்ந்து தேவ சமுகத்திலே தங்கள் ஆத்துமாக்களைச் தாழ்த்தாமலிருக்கிறவர்கள், இன்னும் தேவ இரக்கத்தைப் பெறுவதற்கிருக்கிற முதல் நிபந்தனையை நிறைவேற்றாமலிருக்கிறார்கள். நம்முடைய இருதயம் மனந்திரும்பி குணப்படாமலும் ஆத்துமா தன் நிந்தையை மெய்யாய் உணராமலும், நொருங்குண்ட ஆவியினாலே நம்முடைய பாவங்களை அறிக்கையிடாமலும், நம்முடைய அக்கிரங்களை அருவருக்காமலுமிருப்போமானால், பாவமன்னிப்பை இன்னும் உண்மையாய்த் தேடாதவர்களாயிருப்போம். இப்படி நாம் தேடாதவர்களாயிருந்தால் தேவசமாதானத்தை இன்னும் கண்டடையவில்லையே. கடந்த காலத்தில் நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பையடையாமல் இருப்பதற்கு ஒரே ஒரு காரணமுண்டு. அதாவது நாம் நம்முடைய இருதயத்தைத் தாழ்த்தவும் கீழ்ப்படுத்தவும் சத்திய வசனத்திலுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றவும் மனமற்றவர்களாயிருப்பதுதான். இவ்விஷயத்தைபற்றி தெளிவான போதனை நமக்கு அருளப்பட்டிருக்கிறது. பாவ அறிக்கை அந்தரங்கத்திலோ வெளியரங்கthhத்திலோ எங்கே செய்தாலும் நொறுங்குண்ட இருதயத்தோடும், முழு மனதோடும் அறிக்கையிடவேண்டும்; பாவியானவன் கட்டாயத்தினால் தன் பாவங்களை அறிக்கையிடுவதுதகாது. அவபக்தியாயும் அஜாக்கிரதையாயும் செய்யக்கூடாது. அல்லது, பாவ சுபாவத்தை வெறுக் கிற வெறுப்பில்லாதவர்கள் வில்லங்க்மாய்ச் சொல்லிச் செய்வதும் ஒவ்வாது. பாவ அறிக்கையாவது அளவற்ற இரக்கமுள்ள தேவனுக்கு நேராய் உள்ளான இருதயம் கொட்டுண்டு போவதேயாம். “நொருங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” சங். 34: 18 என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். SC 64.1

உண்மையான அறிக்கை எப்போதும் சிறந்த லட்சண முடையதாய், இன்னின்ன பாவங்களைச் செய்த்தாக ஒத்துக்கொள்வதேயாம். அவைகள் தேவ திருச்சந்நிதியில் மாத்திரம் கொண்டுவரத்தக்கதன்மையுடைவைகளாயிருக்கலாம்; யாருக்கு விரோதமாக ஒரு பாவம் செய்யப்பட்டதோ அவர்களிடத்திலே அதை அறிக்கை செய்ய வேண்டியதாகவுமிருக்கலாம். அல்லது பகிரங்கத்திலே அறிக்கையிடவேண்டிய தன்மையுடையதாக விருந்தால், அது பகிரங்கத்திலேதான் அறிக்கைசெய்யப்படவேண்டும். ஆனால் அறிக்கைகளெல்லாம் திட்டாமாகவும் குறிப்பாகவுமிருக்கவேண்டியதுமன்றி, எந்தப் பாவத்தினால் குற்றவாளியாகத் தீர்க்கப்படுகிறோமோ அந்தப்பாவத்தையே அறிக்கையிடவும் வேண்டும். SC 65.1

சாமுவேலின் நாட்களில் இஸ்ரவேலர் கர்த்தரைவிட்டு வழிவிலகி, தங்கள் மனம்போனபடி திரிந்தலைந்தார்கள். தங்கள் பாவத்தின் பலனை பட்டனுபவித்தார்கள். ஏனென்றால், அவர்கள் தேவனிடத்தில் விசுவாசமற்றுப் போனார்கள். தங்களை ஆளும் ஆண்டவருடைய வல்லமையையும் ஞானத்தையும் அறிகிற அறிவுமில்லாமற்போனார்கள். தம்முடைய ஜனத்தை ஆதரிக்கவும் பரிபாலிக்கவும் கூடிய அவருடைய சக்தியின் பேரில் நம்பிக்கையற்றும்போனார்கள். ஜெகத்தையாளும் ராஜாதிராஜனை அவர்கள் கைவிட்டு, தங்களைச் சூழவிருந்த ஜாதியாரால் ஆளப்படும்படி விரும்பினார்கள். அவர்கள் சமாதானத்தைக் கண்ட டைவதற்குமுன்னே, “நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு இராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் கூட்டிக்கொண்டோம்” 1 சாமு. 12: 19 என்ற இந்தத் திட்டமான அறிக்கையைச் செய்தார்கள். எந்தப் பாவம் அவர்களை குற்றவாளிகள் என்று உணர்த்தினதோ அந்தப் பாவத்தையே. அவர்கள் அறிக்கையிட வேண்டியதாயிருந்தது. அவர்கள் நன்றிகேடு அவர்களுடைய ஆத்துமாவை நெருக்கி வருத்தி தேவனிடத்திலிருந்து அவர்களை அகற்றிப்போட்டது. SC 66.1

உத்தம மனஸ்தாபமும், உண்மையான மனந்திரும்புதலும், சரியான சீர்திருத்தமு மில்லாத பாவ அறிக்கை தேவனுக்குகந்ததல்ல. நம்முடைய ஜீவியத்திலே திட்டமும் தீர்மானமுமான மாறுதல் இருக்கவேண்டும். தேவனுக்கு ஆகாதவைகளெவைகளோ அவைகள் ஒவ்வொன்றையும் அகற்றிவிடவேண்டும். இதுவே பாவத்துக்காக உண்டாகும் உண்மையான துக்கத்தின் பலன். ஆகவே, நாம் செய்து கொள்ளவேண்டிய வேலையின் அவசியம் நமக்குமுன் தெளிவாய் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது “உங்களைக் கழுவிச்சுத்திகரியுங்கள்: உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமை செய்தலை விட்டு ஒயுங்கள்; நன்மை செய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்” ஏசா. 1: 16, 17. “துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக் கொடுத்துவிட்டு, அநியாயஞ் செய்யாதபடி ஜீவப் பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்” எசே. 33: 15 என்பதே. SC 66.2

மனந்திரும்புவதாலுண்டாகும் கிரியைகளைக் குறித்து பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிறதாவது, “பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்க மடைந்ததுண்டே; அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ் சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்தி வைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லா விதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்” 2 கொரி. 7: 11 என்பதே. SC 67.1

பாவமானது ஞானவுணர்ச்சியை ஸ்மரணையற்ற தாக்குகிறபோது பாவி தன் சுபாவத்திலுண்டாகிற குறைவையறிந்துகொள்ளுகிறதுமில்லை; தான் செய்த பொல்லாங்கின் ஏராளத்தையும் உற்றறிகிறதுமில்லை. பரிசுத்தாவி உணர்த்துகிறவல்லமைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தாலொழிய மற்றப்படி தன் பாவத்தைப் பார்க்கக்கூடாத ஒரு கண் குருடனாய்த்தான் இருப்பான். அவனுடைய அறிக்கைகளில் ஊக்கத்தையும் உண்மையையும் காண்பதரிது. தான் சொய்த குற்றத்தை உணருகிறபோதெல்லாம் ஒரு போக்குச்சொல்லி தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான். எப்படியென்றல், இன்னின்ன காரணங்களையிட்டு இன்னின்ன குற்றங்களைச் செய்யவேண்டியதிருந்தது, மற்றப்படி இவைகளைச் செய்திருக்கமாட்டேன் என்பதாய்த் தான் அவைகளுக்காக்க் கண்டிக்கப்படும் போதெல்லாம் தன்னைத் தைரியப்படுத்திக்கொள்ளுகிறான். SC 68.1

ஆதாம் ஏவாள் ஆகிய இருவரும் விலக்கப்பட்ட கனியைப் புசித்திவுடனே, வெட்கமும் நடுக்கமும் அவர்களை மூடிக்கொண்டது. தங்கள் பாவத்துக்குப் போக்குச் சொல்வதெப்படி யென்றும், பயங்கரமான தண்டனையினின்றி தப்பித்துக் கொள்வதெவ்வித மென்பதுமே அவர்கள் கொண்ட முதல்யோசனை. கர்த்தராகிய ஆண்டவர் அவர்கள் பாவத்தைக் குறித்து விசாரித்துபோது, ஆதாம் தான் செய்தகுற்றத்தின் பழியில் கொஞ்சத்தை தனக்குத் துணையாயிருந்தஸ்திரீயின் பேரிலும் கொஞ்சத்தை தேவன் பேரிலும் சுமத்தினான். அதாவது, “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விரிக்ஷத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்”. ஆதி. 3: 12. ஸ்திரீயானவளும் அந்தக் குற்றத்தை சர்ப்பத்தின் பேரில் போட்டாள். அதாவது, “சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள் ஆதி, 3;13. இதிலே நீர் ஏன் சர்ப்பத்தை உண்டாக்கினீர்? ஏதேன் தோட்டத்துக்குள்ளே அவன் வருகிறதற்கு நீர் ஏன் இடங்கொடுத்தீர்? என்கிற அந்தக் கேள்விகளே அவள் தன் பாவத்துக்காகச் சொன்ன போக்கின் அர்த்தம். இவ்விதமாக தாங்கள் பாவத்தில் விழுந்து போனதற்குக் காரணம் தேவன் என்றே குற்றஞ் சாட்டினார்கள். தானாகவே நீதிமானாகிக்கொள்ளும் ஆவி முதலாவது பொய்க்குப்பிதாவாயிருந்தவனிலே உண்டாகி, பிறகு ஆதாமின் குமாரர் குமாரத்திகள் யாவராலும் காண்பிக்கப்பட்டது. இந்த விதமான அறிக்கை பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டதல்ல, தேவனும் அதை அங்கிகரிக்கமாட்டார். பாவத்தை போக்குச் சொல்லியாவது சுய நீதியைக்கொண்டாவது மறைத்துகொள்ள விரும்பாத உண்மையான மனந்திரும்புதலையும் மனத்தாழ்மையையும் வெளிப்படுத்துகிற அறிக்கைகளுள்ள திருஷ்டாந்தங்கள் வேதாகமத்திலே உண்டு. மெய்யான மனந்திரும்புதல் தன்னுடைய குற்றத்தை தானே சுமத்திக்கொள்ளவும், மாய்மாலமும் வஞ்சனையுமில்லாமல் அதை ஒத்துக்கொள்ளவும் பாவியைத் தூண்டிவிடும். வானத்தை ஏறெடுத்துப் பார்க்கக் கூடாமல் அந்த ஏழை ஆயக்காரன் செய்ததுபோலவே மெய்யாய் மனந்திரும்புகிற பாவியும் “தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று அலறுவான். இவ்விதம் தங்கள் பாவங்களை ஒத்துக்கொண்டு அறிக்கையிடுகிறவர்கள் நீதிமான்களாக்கப்படுவார்கள். எப்படியென்றல் மனந்திரும்புகிற பாவியினிமித்தம் இயேசு தம்முடைய இரத்தத்தைக் கொண்டு பரிந்து பேசுவார். SC 68.2

பவுல் தன்னை மறைத்துக்கொள்ள வழி தேடினதல்லை. பாவக் குற்றத்தைக் குறைக்கும்படி எத்தினிக்காமல், அதின் பயங்கரமான அந்தகார நிலைமையை வர்ணிக்க முயற்சிக்கிறார். “நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலை செய்யப்படுகையில் நானும் சம்மதிருந்தேன்; சகல ஜெப ஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள்பேரில் மூர்க்க வெறிகொண்டவனாய் அந்நிய பட்டணங்கள் வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.” அப். 26:10,11 என்பதாய் அறிக்கையிடுகிறார். மேலும் அவர் “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார், அவர்களில் பிரதான பாவி நான்” என்று சொல்லவும் பின்வாங்கினதில்லை. SC 70.1

உண்மையான மனந்திரும்புதலினாலே நறுங்குண்டு நொறுங்குண்டிருக்கிற இருதயம் மாத்திரம் தேவனுடைய அளவற்ற அன்பையும், கல்வாரியில் செலுத்தியிருக்கிற கிரயத்தையும் கொஞ்சம் நன்கு மதிக்கும். அன்புள்ள தகப்பனிடத்தில் மகன் தன் குற்றத்தை ஒத்துக்கொள்வதுபோல், மெய்யாய் மனஸ்தாபப்படுகிற பாவியும் தேவ சமூகத்தில் தன் பாவங்களையெல்லாம் கொண்டுவந்து மறைக்காமல் அறிக்கையிடுவான். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறர்.” 1 யோ. 1:9 என்று எழுதுயிருக்கிறது. SC 71.1